திருப்பதிக்கு இந்த நாள்களில் சென்று வழிபட்டால்.. நமது வேண்டுதல்கள் தப்பாமல் நிறைவேறும் தெரியுமா?

First Published | Mar 21, 2023, 12:42 PM IST

Tirupati Darshan:திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எந்த நாளில் சென்றால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

ஆண்டு முழுக்க திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் மக்கள் தரிசித்து அருள் பெறுகின்றனர். ஒருமுறை திருப்பதி சென்று வந்தாலே நம் வாழ்வில் திருப்பம் தான் என்ற நம்பிக்கையினால், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அங்கு சென்று வருகிறார்கள். 

நேர்த்திக்கடன் 

திருப்பதி என்றாலே, அங்கு நேர்த்திக் கடனாக தலை முடியை கொடுப்பதுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மொட்டை போடுவது தான் பெரும்பாலானாவர்கள் செய்யும் நேர்த்திக்கடன். திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையை விடவும், ஏன் லட்டு விற்பனையை காட்டிலும் முடி காணிக்கைதான் கோடிகளில் வருமானம் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று துலாபாரம் காணிக்கையாக கொடுப்பது. இதில் ஏவெல்லம், வாழைப்பழம், அன்னாசி பழம் ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக அளிப்பார்கள் என்றாலும், எடைக்கு எடையாக சில்லரை காசு காணிக்கையாக கொடுப்பது பாரம்பரிய பழக்கம். 

Latest Videos


திருப்பதி வழிபட ஏற்ற நாள்...! 

திருப்பதியில் எல்லா நாள்களும் வழிபாடு செய்யலாம். நினைத்ததும் திருப்பதி புறப்பட்டு போகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அங்கு ஓர் இரவு மட்டுமாது தங்க வேண்டும் என்பது ஐதீகம். இப்படி தங்கினால் ரொம்ப விசேஷம். திருப்பதி பெருமாளை சனியன்று வழிபாடு செய்தால் ரொம்ப நல்லது.

திருப்பதியில் ரோகிணி, திரிவோணம், அஸ்தம் ஆகிய சந்திரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்கள் வரும் நாள்களிலும், முழு பெளர்ணமி அன்றும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்தது. சந்திர ஆதிக்கமுள்ள நாட்களில் திருப்பதி பெருமாளை நாம் தரிசனம் செய்தால் நம் வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். 

திருப்பதியின் சிறப்பு 

திருப்பதி மலை சந்திரனின் ஆற்றல் அதிகம் கொண்ட பகுதி. ஏனென்றால் இந்த மலையே சந்திர சக்தி கொண்ட கற்களால் ஆனது. அதனால் தான் சந்திரனுக்குரிய பரிகார ஸ்தலமாக திருப்பதி விளங்குகிறது. ஜோதிடரீதியாக பார்த்தால் சந்திர பகவான் நம்முடைய மனநிலை தெளிவாக இருக்க உதவுகிறார். நம்முடைய மனம் தெளிவாக இருக்கும்போது நாம் எடுக்கும் எல்லா முடிவுகளும் நல்ல படியாக நிறைவேறும் அதனால்தான் திருப்பதி சென்று தரிசனம் செய்தால் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்கிறார்கள். 

click me!