பங்குனி அமாவாசை நாள் என்றால் சைத்ர அமாவாசை என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது முன்னோர் வாக்கு. அதுமட்டுமா.. இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. பங்குனி அமாவாசை இன்று (மார்ச்.21) முழுவதும் இருக்கிறது. இந்த நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
அமாவாசை திதி முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். இந்நாளில் வழிபட்டால் பித்ரு சாபம் நீங்கும். இறை நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பங்குனி அமாவாசையை ரொம்பவும் நம்பிக்கையுடன் அணுகுவார்கள். பூதாதி அல்லது பூமாவதி அமாவாசை எனவும் இந்த நாளை அழைக்கிறார்கள். இந்த விசேஷ நாளில் கங்கை அல்லது பிற புண்ணிய நதிகளில் நாம் நீராடி வந்தால் எல்லா பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்பது ஐதீகம்.
வம்சம் தழைக்கும்
இந்த நாளில் அன்னதானம் கொடுத்தால் ரொம்ப நல்லது. இன்றைய தினம் குறைந்தபட்சம் மூன்று பேறுக்காவது உணவு வாங்கி பசியாற்ற வேண்டும். அவர்கள் வயிறார உண்டு நம்மை வாழ்த்தினால் பலன்கள் பல கிடைக்கும். வம்சம் செழிக்கும். அன்னதானம் கொடுப்பதால் தொழில் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியில் சிறந்த வாய்ப்பு உருவாகும்.
குழந்தை பாக்கியம்
கல்யாணம் முடிந்து பல மாதங்கள், வருடங்கள் ஆன பின்னும் குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்கள் பங்குனி அமாவாசை அல்லது சைத்ர அமாவாசை அன்று அரச மரத்தின் வேருக்கு தண்ணீர், கருப்பட்டி, பால், பார்லி போன்றவை கலந்து அளிக்க வேண்டும். பின் தம்பதியினர் அரச மரத்தை ஏழு தடவை சுற்றி வர வேண்டும். இன்றைய தினம் மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் வைத்து வழிபட வேண்டும். இதனால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
பித்ரு தோஷம்
பித்ரா தோஷம் இருப்பவர்கள், சைத்ர அமாவாசை (2023) தினத்தில் பித்ருக்களை வணங்கி அவர்களை குளிர செய்ய வேண்டும். இன்று கறுப்பு எள்ளை தானமாக கொடுத்தால் சனி பகவான் அருளை வாரி வழங்குவார். பித்ரு தோஷம் கூட நீங்கும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரங்களை செய்வதால் குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பொருளாதாரநிலை உயரும்.
இதையும் படிங்க: protein: புரதச்சத்து நினைச்சத விட அதிகம் கிடைக்கணுமா? காலையில் இந்த உணவுகள் போதும்..!