சரபேஸ்வரர் அருள்..!
பகைவர்களை அழிக்க இவரை வழிபாடு செய்யலாம். நம்முடனே இருந்துகொண்டு நமக்கு துரோகம் செய்பவர்கள், சூழ்ச்சிகளில் நம்மை வீழ்த்துபவர்கள் ஆகியோரை எதிர்க்க சரபேஸ்வரர் வழிபாடு துணை செய்யும். கோயில்களில் சிங்கர் முகம், கால்கள், மனித உடலில் பொருந்திய இறக்கைகளுடன் ஆக்ரோஷமாக சரபேஸ்வரர் வீற்றிருப்பார்.
இதையும் படிங்க: திருப்பதிக்கு இந்த நாள்களில் சென்று வழிபட்டால்.. நமது வேண்டுதல்கள் தப்பாமல் நிறைவேறும் தெரியுமா?
அவரை வணங்காமல் வராதீர்கள். அவர் ஈசனின் ரூபம். பரிகாரம் செய்தும் நிவர்த்தி கிடைக்காத கஷ்டங்களுக்கு சரபேஸ்வரரை வணங்கினால் போதும். மருத்துவர்கள் கைவிரித்த நோய்கள் கூட இவரை வணங்கினால் நீங்குமாம். நம் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் கெட்ட சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகிய பிரச்சனைகளை கூட சரபேஸ்வரர் வழிபாடு சரி செய்யும். நம் குடும்பத்திற்கு குலதெய்வம் எப்படி அரணாக இருந்து காப்பாரோ... அதைப் போல, சரபேஸ்வரர் தன்னில் தஞ்சம் அடைந்தவர்களை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுவித்து பாதுகாப்பார்.