நெல்லி மரம் வைப்பதன் நன்மைகள்
மகாவிஷ்ணுவை வழிபடும்போது நெல்லிக்காய் மரத்தையும் வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் தங்கும். அதனுடன் எல்லாம் இன்னல்களையும் சமாளிக்க வழிகள் பிறக்கும் என்பது ஐதீகம். உங்களுடைய வீட்டில் ஒரு நெல்லிக்காய் மரத்தை வைத்து வளர்ப்பது உங்களுடைய தலையெழுத்தையே மாற்றிவிடும்.
இதையும் படிங்க: தங்க நகை வாங்கும் யோகம் வரணுமா? இந்த இடத்தில் கண்ணாடி வைங்க! பணம் உங்களை தேடி வரும் என்பது நிச்சயம்!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நெல்லிக்காய் மரம் புனிதமானது. மங்களகரமான இந்த மரத்தை வீட்டில் நடுவதால் எதிர்மறையாற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலை கொண்டிருந்தால் செல்வமும் செழிப்பும் அதிகமாகும். நெல்லிக்காய் மரத்தை நடும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.