அரிசி மாவில் ஃபேஸ் பேக்: 3 ஸ்பூன் அரிசி மாவு, தயிர், காய்ச்சாத பால் ஆகியவற்றை நன்கு கலந்து, அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, லேசாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நன்மைகள்: முகத்தில் இருந்து இறந்த செல்கள் வெளியேற்றப்படும், அழுக்குகள் நீங்கும், முகத்தின் மங்கிய நிறம் மாறும். இந்த நன்மைகளைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம்.