கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக ஜொலிக்க உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க..!
சரும பராமரிப்பதற்கு உருளைக்கிழங்கை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்டுகளிலும் இருக்கும். இது சமையல் பயன்பாட்டை தவிர கரும்புள்ளிகளை நீக்குவது முதல் முகத்தை பிரகாசமாக வைப்பது வரை என எண்ணற்ற தோல் பராமரிப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது. இப்போது சரும பராமரிப்பதற்கு உருளைக்கிழங்கை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும் என்சைம்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கவும் பல பளபளபாகவும் ஒளிரச் செய்ய உதவுகிறது
எனவே, பளபளப்பான சருமத்தை பெற உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதிலிருந்து சாறை பிழிந்து எடுத்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதை அடிக்கடி செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும் மற்றும் சருமத்தின் நிறத்தை சமன் செய்யும், பிரகாசமாகும்.
நீங்கள் முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உருளைக்கிழங்கு பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். ஏனெனில், இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதற்கு உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதனுடன் தேர் கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
உருளைக்கிழங்கு சாற்றை உங்கள் முகத்தில் தடவினால், அது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும். ஏனெனில் அதில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. உருளைக்கிழங்கில் பாலிஃபீனால்கள் உள்ளன. அவை சூரியக் கதிர்களால் சருமத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கின்றன.
இதையும் படிங்க: அடிக்குற வெயிலால உங்கள் கை, கால் கருப்பா ஆகிறதா..? கவலைப்படாதீங்க 5 நிமிஷத்துல வெள்ளையாக மாற்றலாம்!
உங்கள் முகத்தில் சுருக்கங்கள் இருந்தால், உருளைக்கிழங்கு சாற்றில் கற்றாழை ஜெல் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் சருமம் குளு குளுனு இருக்க சூப்பரான ஃபேஸ் பேக்..! இப்பவே செய்ங்க..
உங்கள் கண்களுக்குக் கீழே கருவளையம் இருந்தால், உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அதை கண்களில் மேல் வைக்க வேண்டும். இது கருவளையங்களை பெருமளவு குறைக்கும்.
உருளைக்கிழங்கை கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா..? உருளைக்கிழங்கு சாற்றை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவி சிறிது சில நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி செய்தால் உங்களது கூந்தல் வலுவடையும் மற்றும் முடி உதிர்வு தடுக்கப்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D