Amavasai: இன்று சூரிய கிரணத்துடன் கூடிய ஐப்பசி அமாவாசை..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது?

First Published | Oct 18, 2022, 9:52 AM IST

Amavasai Tharpanam 2022: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளான இன்று, அக்டோபர் 25 நிகழப் போகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களை வரவேற்க தர்ப்பணம் கொடுப்பது எப்போது என்பதை பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளான இன்று அமாவாசை நிகழ உள்ளதால், இந்த நாள் நம்முடைய முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகச்சிறப்பான நாள் ஆகும் என்று சாஸ்திர பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும் படிக்க...தீபாவளிக்கு மறுநாள் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. கடும் நெருக்கடியை சந்திக்க போகும் ராசிகள் இவைகள் தான்.!

 12 மாதங்களில் வருகின்ற மற்ற எந்த அமாவாசை தினங்களை காட்டிலும் ஐப்பசி மாசம் வருகின்ற அமாவாசை தினம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு அமாவாசை தினமாக கருதப்படுகின்றது. தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளய பட்சத்தின், 15 நாட்கள், கிரகண காலங்கள், திதி முதலான நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும், முன்னோர்களை வணங்கவேண்டும்.  அதிலும், இந்த தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும்  இந்த கடைசி சூரிய கிரகணம் அன்று நிகழும் அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். 
 

Tap to resize

பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, காகங்களுக்கு உணவிட வேண்டும், இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். தானத்தில் சிறந்த ஒன்றான, அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும் பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.  தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். 
 

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை ஆகும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். இந்த நாளில் தான், தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் சந்திரனும், சூரியனும் இணைகிறார்கள். எனவே, இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

இந்த ஐப்பசி மாத அமாவாசை திதி,  இந்திய நேரப்படி, அக்டோபர் 24 ஆம் தேதி சரியாக மாலை 5.27 மணிக்கு தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:18 மணி வரை நீடிக்கின்றது.

அதோடு, தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை வருகிறது. அன்றே சூரியகிரகணமும் நிகழ்கிறது. இரண்டிற்கும் தர்ப்பணம் செய்வது நம் பழக்கத்தில் உள்ளது. . பல தர்மசாஸ்திர நுாலில் இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தால், சூரிய கிரகணம் பிடிக்கும் போது மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் என கூறுகிறது. அதனால், இரண்டிற்கு ஒரே சேர்த்து நாளில் தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

இந்த அமாவாசை தினத்தில் எக்காரணம் கொண்டும் புலால் உணவுகளை உண்ணக்கூடாது. மேலும் அன்றைய தினம் மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவற்றையும் செய்யக்கூடாது.

எனவே, 25ம் தேதி மாலை 5:15 மணிக்கு சூரியகிரகணம் துவங்கிய பின், ஸ்நானம் செய்து, தர்ப்பணம் செய்தால் போதும்.  இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. 

Latest Videos

click me!