தூங்கும் போது இந்த ஒரு இலையை தலையணைக்கு அடியில் வைத்து பாருங்கள்..உங்களின் மன கவலை, தீராத பிரச்சனை விலகும்..!

Published : Oct 16, 2022, 01:10 PM IST

Vastu Tips for Bedroom: மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை, இருப்பவர்கள் கீழே கூறும் இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒரு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.  

PREV
15
தூங்கும் போது இந்த ஒரு இலையை தலையணைக்கு அடியில் வைத்து பாருங்கள்..உங்களின் மன கவலை, தீராத பிரச்சனை விலகும்..!

சில பேரின் வாழ்கை பயத்தோடு எப்போதும் இருக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு பதட்டம், பயம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அதிகமாக டென்ஷன் ஆவார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே எங்கும் பயம், எதிலும் பயம் என்ற குழப்பத்தில் செல்லும்.

25

இப்படி பயந்து பயந்து வாழ்நாளில் பாதி நல்லதை அவர்கள் இழந்திருப்பார்கள். இப்படியான பிரச்சனைகள் இருப்பவர்கள் கீழே கூறும் இரண்டு குறிப்புகளில் ஏதேனும் 
ஒரு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.  

மேலும் படிக்க...வீட்டில் இந்த ஒரு பொருள் வைத்திருந்தால்..வறுமை விலகும், அதிர்ஷ்டம் தரும்..வியக்க வைக்கும் வாஸ்து குறிப்புகள்.!

35

டிப்ஸ் 1:

இதற்கு முதலில் மூலிகை அம்மான் பச்சரிசி இலை பறித்து கொள்ளுங்கள். இதை பறிக்கும் போது லேசாக பால் வரும். அதை கழுவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் இலை மட்டும் நமக்கு போதும். அந்த இலைகளை சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி உங்கள் தலையணைக்கு அடியில் உங்களுடைய படபடப்பு குறையும் மன பயம் நீங்கும். பதட்டம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வீர்கள்.  

 

45

டிப்ஸ் 2:

மூலிகை செடியில் இருந்து கிடைக்கும் நாயுருவி வேர். இந்த செடியை காம்புகளோடு பறித்து வந்து அப்படியே நன்றாக நிழலிலேயே காய வைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை வாரம் ஒரு முறை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளித்து வர மன பயம் நீங்கும். இதன் மூலம், மன உறுதியும் மன தைரியமும் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

 

55

நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள், ஏனெனில் பயத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேற இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள சுலபமான  வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...வீட்டில் இந்த ஒரு பொருள் வைத்திருந்தால்..வறுமை விலகும், அதிர்ஷ்டம் தரும்..வியக்க வைக்கும் வாஸ்து குறிப்புகள்.!

Read more Photos on
click me!

Recommended Stories