இந்த புரட்டாசி 4-வது சனிக்கிழமை, ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். குறிப்பாக, வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கேட்டவருக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் தெய்வம் ஆஞ்சநேயர். இவரை நாம் மனதார வேண்டிக் கொண்டு, வால் வழிபாடு செய்தால் நம் மனதில் நினைத்த காரியங்களை நிச்சயம் நமக்கு நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த வழிபாடு செய்வதற்கு சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நம் வீட்டில் பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் நல்லது. மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
அதேபோன்று, இந்த சனிக்கிழமை அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.
தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.