Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால் உண்டாகும் புதிய யோகம்...உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..

First Published | Oct 13, 2022, 6:07 AM IST

Sevvai Peyarchi 2022 Palangal: செவ்வாய் கிரகம் அக்டோபர் 16ஆம் தேதி மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

ஜோதிடத்தின்படி: செவ்வாய் கிரகம் மிகவும் ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் ஒன்று. இந்த கோளின் பெயர்ச்சி பலரின் வாழ்க்கையிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், தற்போது இருக்கும் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால், தரித்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் போது, ​​சில ராசிக்காரர்களுக்கு பணம் இழப்பு மற்றும் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். இதில் ஒவ்வொரு ராசிக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க.12 வருடங்களுக்கு பிறகு குருவின் வக்கிர நிலை..துன்பத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிகள், உங்கள் ராசி இதில் இல்லையே

கன்னி

பண விஷயங்களில் சிக்கல் ஏற்படலாம். தொழிலில் பிறரின் ஆலோசனையைப் பெறுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் அதைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். பணியிடத்திலும் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இருப்பினும், உங்கள் புரிதலை வெளிப்படுத்துவதன் மூலம், எந்தவொரு சிக்கலையும் நீங்கள் விரைவில் தீர்க்க முடியும்.

மேலும் படிக்க.12 வருடங்களுக்கு பிறகு குருவின் வக்கிர நிலை..துன்பத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிகள், உங்கள் ராசி இதில் இல்லையே

Tap to resize

மிதுனம்

வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், இது உங்கள் செயல்திறனை கெடுத்துப் போடும். இந்த நேரத்தில் உங்களுக்கு பணம் செலவாகலாம் அல்லது பயணங்கள் அதிகமாகலாம். சுப செலவு அதிகமாவதால் கவலைப்படாதீர்கள். வாழ்வில் உங்களின் முன்னேற்றம் தடைபடும்.சஞ்சாரம் சற்று பின்னடைவைத் தரும்

சிம்மம்

திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் மன வருத்தம் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையும், அச்சமும் வாழ்க்கையை சிரமப்படுத்துவதால், மன அழுத்தமும், தூக்கமின்மையும் ஏற்படும்.  வாழ்வில் பிரச்சனைகள் வரும்.வேலைவாய்ப்பு வந்து சேரும். பிரச்சனைகளை இன்னும் சில நாட்கள் நிதானமாக காத்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க.12 வருடங்களுக்கு பிறகு குருவின் வக்கிர நிலை..துன்பத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிகள், உங்கள் ராசி இதில் இல்லையே

Latest Videos

click me!