தீராத பிரச்சனையை தீர்த்து வைக்க..தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு வைத்து, இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்..!

Published : Oct 12, 2022, 10:54 AM ISTUpdated : Nov 01, 2022, 03:46 PM IST

Kallu Uppu Parikaram in Tamil: வீட்டில் தொடர் பிரச்சினைகளும், சுபகாரிய தடையும், கடன் தொல்லைகளும் வந்து கொண்டே இருக்கிறதா.? அதற்கு வாஸ்து தோஷம் ஒரு விதமான காரணமாக இருக்கலாம். நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், நாம் வாஸ்து சாஸ்திர முறைப்படி சில பரிகாரங்களை செய்ய வேண்டியது அவசியம். 

PREV
17
தீராத பிரச்சனையை தீர்த்து வைக்க..தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு வைத்து, இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்..!

இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பணம் வீட்டில் தங்கவே தங்காது. அதே போல் தான் சிலர் பிரச்சனைகளில் சமாளிக்க முடியாமல் பிரச்சனையிலேயே மூழ்கி விடுவார்கள்.

27
Kallu Uppu Parikaram in Tamil:

இன்னும் சிலர், கடன் வாங்கிய பிறகு அதை எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள். எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் வீட்டிற்கு வரவும், வந்தப் பணம் வீண் விரையம் இல்லாமல் நம் கையிலே தங்கி இருக்கவும் சில வழிமுறைகள் உள்ளது. அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
 

37
Kallu Uppu Parikaram in Tamil:

அதற்கு முதலில், மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு கைப்பிடி உப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த உப்பை வைத்து பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களுக்கான பிரச்சினையை தீர்க்கும், வறுமை விலகும். உங்களின் கடனை விரைவில் அடைக்க முடியும்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

47
Kallu Uppu Parikaram in Tamil:

 


 இந்த பரிகாரத்தை செய்வதற்கு,நீங்கள் படுக்கும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், இரண்டு கைப்பிடி அளவு உப்பு போட்டு, அந்த டம்ளர் முழுவதும்  தண்ணீரால் நிரப்பி விட வேண்டும்.

57

 இந்தக் கண்ணாடி டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்தில் கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம்.  இப்போது உங்களின் குல தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு, மனதார உங்களின் பிரச்சனைகளை நினைத்து வேண்டி கொள்ளுங்கள். 

 

67
Kallu Uppu Parikaram in Tamil:

 

காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரை வாஷ் பேசினில் கொட்டி விடவும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து பத்து நாள் இதே போல் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தீராத பிரசனைகள் எல்லாம் விலகும். 

 மேலும் படிக்க..தீராத கடன் பிரச்சனை உங்களை ஆட்டி படைக்குதா? அப்படினா..வீட்டில் இந்த 5 வாஸ்து விதிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.!

77
Kallu Uppu Parikaram in Tamil:

அதேபோன்று, மஞ்சள் துணியில் கொட்டைப்பாக்கு, வெள்ளி காசு, நாணயம், தங்கம் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 மேலும் படிக்க..தீராத கடன் பிரச்சனை உங்களை ஆட்டி படைக்குதா? அப்படினா..வீட்டில் இந்த 5 வாஸ்து விதிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.!

click me!

Recommended Stories