வாஸ்து ரீதியான அதிர்ஷ்ட பொருட்களில் ஒன்று ‘ஆமை சிலை’ ஆகும். ஆன்மீகத்தின் படி ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று பழமொழி கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆமை வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆமை இருக்கும் இல்லம் நிச்சயம் உருபடும். அதிலும், உலோகம், ஸ்படிகம், மரம், கல் போன்றவற்றால் உருவாகக்கூடிய ஆமை ரொம்பவும் விசேஷமானது. இதனை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வைத்திருக்கும் போது, வறுமை விலகி, செல்வம் பெருகுமாம்.