அட்சயதிரிதியை 2023 எப்போது வருகிறது? இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?

First Published | Apr 3, 2023, 4:27 PM IST

Akshaya Tritiya 2023| தங்கம் வாங்க சிறந்த நாளாக சொல்லப்படும் அட்சயதிரிதியை குறித்த முழுவிரங்கள்..! அட்சயதிரிதியை நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு என்னென்ன வாங்கலாம் என்பதை இங்கு காணலாம். 

அட்சய திரிதியை மிகவும் சிறப்பான நாள். இந்த தினத்தில் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் பல மடங்கு பெருகி, என்றும் அழியாத நன்மைகளை பெற்றுத் தரும். அட்சய திரிதியை தினத்தில் கண்டிப்பாக கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். புனித நீராடுவது, பித்ருகளுக்கு காரியம் செய்வது, நம்மால் முடிந்த தானம் செய்தல் கனவில் கூட நாம் நினைக்காத பலன்களை நமக்கு பெற்று தரும். 

அட்சய திரிதியை என்றால் தங்கம் வாங்குவது தான் எல்லார் நினைவுக்கும் வரும். உண்மைஉண்மை தான். இந்த நாளில் லட்சுமி வசிக்கும் பொருள்களை வாங்கினால் நல்ல யோகம் தான். அதற்காக தங்கம், வெள்ளி ஆகிய ஆபரணங்களை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது அல்ல. அவற்றையும் வாங்கலாம். அவை தவிர பச்சரிசி, வெல்லம், உப்பு போன்றவையும் வாங்கலாம்.  

Tap to resize

இந்தாண்டு அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு, மகா லட்சுமியை நாம் வழிபட்டால் நம் வீட்டில் செல்வம், தானியங்களுக்கு பஞ்சம் இருக்காது. சாஸ்திரங்களின்படி, அட்சய திரிதியை நாள் செழிப்பு, மகிழ்ச்சியின் நாளாக கருதப்படுகிறது. 

அட்சய திரிதியை நாளில் விஷ்ணு பகவானை வழிபட்டால், வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றலும் முடிவுக்கு வரும். நமக்குள் இருக்கும் எதிர்மறை சிந்தனைகளும் கூட விலகும். இந்நாளில் செய்யும் தானம் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன்களை நமக்கு கொடுக்கும். இதனால் உணவும், பணமும் நம் வாழ்நாளில் எப்போதும் நிறைந்திருக்கும். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!

அட்சய திருதியை நாளில் செய்யும் நல்ல செயல்களின் பலன்கள் ஒருநாளும் காலாவதியாகாது. முடிவில்லாமல் அதன் பலன்கள் கிடைக்கும். அட்சய திரிதியை தங்கம் வாங்கி திருமணம் செய்தால் நன்றாக வாழ்வார்கள். நாம் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய ஏற்ற நாள் 'அட்சய திரிதியை' தான். இந்த நாளில் வாங்கும் எந்தவொரு பொருளும் அதிக சுப பலன்களை தரும் என்பது ஐதீகம். புதிய வாகனம் வாங்குதல், வீடு, நகை வாங்குதல் போன்ற காரியங்களை இந்த நாளில் செய்வதற்கு காரணம் அதுதான். நீங்களும் அட்சய திரிதியை அன்று மேலே சொன்ன பொருள்களை வாங்கி அதிகமான பலன்களை பெறுங்கள். 

இதையும் படிங்க: குடும்ப தோஷம் நீங்க!! குலதெய்வத்துக்கு இந்த 1 காரியம் செய்யுங்க! வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்!

Latest Videos

click me!