ஒவ்வொரு வீட்டிலும் தயிர் இருப்பது இயல்பு. சாயங்காலம் யாராவது வந்து கொஞ்சம் தயிர் கொடுங்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, எதிர்த்த வீட்டுக்காரர்களுக்கோ நிறைய பேர் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஜோதிடத்தின்படி, சாயங்காலம் 5 மணிக்கு மேல் தயிரை யாருக்கும் தானம் செய்யக்கூடாது. இது சுக்கிரனுடன் தொடர்புடையது. சாயங்காலம் தயிர் தானம் கொடுப்பது பண இழப்புக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குறையக்கூடும். தயிர் தானம் செய்ய விரும்பினால் காலையிலோ அல்லது மதியத்திலோ மட்டும் செய்யுங்கள். சாயங்காலம் யாருக்கும் கொடுக்காதீர்கள்.