இரவில் 'பிரா' அணிந்து தூங்குவது நல்லதா..? இதனால் பிரச்சினைகள் வருமா..?
இரவில் தூங்கும் போது பிரா அணிந்து தூங்க வேண்டுமா.. இல்லையா.? பெரும்பாலான பெண்கள் இந்த கேள்வியால் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இன்றே இதிலிருந்து விடுபடுங்கள்..
இரவில் தூங்கும் போது பிரா அணிந்து தூங்க வேண்டுமா.. இல்லையா.? பெரும்பாலான பெண்கள் இந்த கேள்வியால் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இன்றே இதிலிருந்து விடுபடுங்கள்..
பெண்கள் தங்களை அழகாக காட்ட விதவிதமான ஸ்டைலான ஆடைகளை அணிய விரும்பினார்கள் ஆனால், அவர்கள் பிராக்களை தேர்வு செய்யும் போது பல குழப்பங்களை எதிர்கொள்கின்றனர். இன்றும், பெரும்பாலான பெண்கள் தங்கள் பிராவின் சரியான அளவு என்னவென்று தெரியாது என்பதே உண்மை.
அந்த வகையில், இரவில் பிரா அணிந்து தூங்க வேண்டுமா இல்லையா? என்பது மிக முக்கியமான கேள்வி. சில பெண்கள் அதை அணிந்து தூங்குவதை அசெளமரியமாக உணர்வதால், அதை கழற்றிவிட்டு தூங்குகிறார்கள். அதேசமயம் சில பெண்கள் அதை அணிந்து தூங்க விரும்புகிறார்கள்.
மேலும், பல பெண்கள் இரவில் ப்ரா அணிந்து தூங்குவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்களை சொல்லுகின்றனர். எனவே இரவில் பிரா அணிந்து தூங்குவது அவசியமா..? எந்த நபர்கள் ப்ரா அணிந்து தூங்க வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்று சந்தையில் பலவகைகளில் பிராக்கள் கிடைக்கின்றன. இவற்றில், பேடட் ப்ராக்கள் முதல் அண்டர்வைர் ப்ராக்கள் வரை அடங்கும். மேலும், பிராக்களை தொடர்ந்து பல மணி நேரம் அணிவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
அதுவும் குறிப்பாக, இரவில் தூங்கும் போது அண்டர்வைர் ப்ரா அணியவே கூடாது. ஏனெனில், இந்த வகை பிராவில் உள்ள கம்பிகள் மார்பகத்தைச் சுற்றியுள்ள தசைகளை அழுத்தி வைத்திருக்கும். இது நரம்பு மண்டலத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும்.
அது போல, பிராவை தொடர்ந்து நீண்ட நேரம் அணிவதால் சருமத்தில் நிறமாற்றம் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இரவில் அதைக் கழற்றிவிட்டு தூங்குவதே நல்லது. இருப்பினும், அதிக மார்பகங்களைக் கொண்ட பெண்கள் இரவில் ப்ரா அணிந்துதான் தூங்க வேண்டும். இதற்கு நீங்கள் லேசாக மற்றும் தளர்வாக இருக்கும் பிராவை அணியுங்கள்.
இதையும் படிங்க: இரவில் தூங்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்கள்..எந்த நோயும் உங்களை நெருங்காது..!!
இரவில் ப்ரா அணிந்து தூங்குவதைக் குறித்து பல நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களைக் சொல்லுகின்றனர். முக்கியமாக, நீண்ட நேரம் ப்ரா அணிவதால் மார்பகங்கள் இறுக்கமாக இருப்பதால், சரியாக மூச்சு விடாமல் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுற்றியுள்ள தோல் ஈரமாகிறது, அதில் பாக்டீரியா எளிதில் வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: BRA கப்பில் கோடு உள்ளது ஏன் தெரியுமா? அடுத்த முறை வாங்கும் போது கவனமாக இருங்கள்..!
பிரா அணிவது நல்லது என்றாலும், 24 மணி நேரமும் பிரா அணிந்தால் உடல் வடிவம் கெட்டுப் போகும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D