Actor Captain Vijayakanth
சினிமாவுக்காக தன்னுடைய பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்ட, இவருடைய உண்மையான பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்த இவர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு ரைஸ்மில் முதலாளியாக இருந்தார். திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருந்த விஜயகாந்த், வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர்.
Vijayakanth Acting SAC Direction
தன்னுடைய நிறத்தாலும், நடிப்பாலும் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் விஜயகாந்த். ஒரு வழியாக 1979 ஆம் ஆண்டு, எம்.ஏ.கஜானாவின் இயக்கத்தில் 'இனிக்கும் இளமை' என்கிற படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து தரமான வெற்றிப்படத்தை கொடுக்க விஜயகாந்த் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், எஸ் ஏ சி இயக்கத்தில், 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மனைவியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு செக்! தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!
Vijayakanth Help to Vijay
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒளி வீச செய்த, எஸ் ஏ சி-யை ஒருபோதும் மறக்காத விஜயகாந்த், எஸ் எஸ் சி-க்காக அவருடைய மகன் விஜய்யுடன் சிறப்பு தோற்றத்தில் ஒரு படத்தில் நடித்தார். இந்த படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் எஸ்ஏசி இயக்கத்தில் மட்டும் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.
Vijayakanth Movies
ஆக்சன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து, கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தை மிஞ்சும் விதத்தில் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் விஜயகாந்த். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல, ரமணா, சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், போன்ற படங்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படங்களாக அமைந்தன.
வசூலில் மாரியை வென்றாரா சூரி? கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
Vijayakanth Give Chance for Debut Directors
திரையுலகில் தன்னை போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்ட விஜயகாந்த், தன்னை வைத்து படம் இயக்க வரும் முன்னணி இயக்குனர்களை விட அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கினார். குறிப்பாக சுமார் 54 புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார்.
Captain Vijayakanth Trust Directors
சில நடிகர்கள் தன்னுடைய படம் இப்படி தான் இருக்க வேண்டும் என இயக்குனர்களுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் அப்படி எந்த ஒரு தொந்தரவும் செய்யாத நடிகர் விஜயகாந்த் தான். கைநீட்டி சம்பளம் வாங்கி விட்டால், அந்தப் படத்தின் கதையில் எப்போதுமே தன்னுடைய கருத்தை திணிக்க மாட்டார். இயக்குனரை நம்பி மட்டுமே அந்த படத்தில் நடித்து முடிப்பார். இது விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் கடைசி வரை சினிமா வாழ்க்கையில் கடைபிடித்த மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது.
மாரி செல்வராஜின் 'வாழை' ரசிகர்கள் மனதை வென்றதா? முதல் நாள் வசூல் விவரம்!
Captain Vijayakanth Movies
அதேபோல் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து வெளியே வரும் இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படங்களில் பணியாற்றும் வாய்ப்பை கொடுத்தவர். அப்படி இவர் கொடுத்த வாய்ப்பில் உருவான உழவன் மகன், செந்தூரப்பூவே, காவியத்தலைவன், போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன.
Vijakanth Not using Dupe For Stunt
பெரும்பாலும் தன்னுடைய திரைப்படங்களில் சண்டை காட்சியில் டூப் போட மற்றவர்களை அனுமதிக்காதவர் நடிகர் விஜயகாந்த். இதற்க்கு ஒரு பிளாஷ் பேக் கதையும் உண்டு, விஜயகாந்த் நடித்த நாளை உனது நாள் திரைப்படத்தில் விஜயகாந்த்துகாக டூ போட்டு நடித்த ஸ்டண்ட் கலைஞர், தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இனி தனக்காக யாரும் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடிக்க கூடாது என்பதில், தெளிவாக இருக்கும் விஜயகாந்த் தனக்கான ஸ்டண்ட் காட்சியை அவரே நடித்தார்.
எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!
Real Captain in Cinema Industry
கேப்டன் என்கிற பெயர் மிகவும் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுவது.ஒரு நிறுவனத்தையே அல்லது ஒரு கப்பலகே பாதுகாக்கும் அதிகாரியை தான் கேப்டன் என கூறுவது வழக்கம். அப்படி தன்னுடைய துறையில் சிறந்து விளங்கிய விஜயகாந்த்க்கு இந்த பட்டம் மக்களால் கொடுக்கப்பட்டது. இந்த பெயர் இவருக்கு வர முக்கிய காரணம், 1991 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரை அனைவரும் கேப்டன் என கொண்டாட துவங்கினர். இதுவே இவரது அடையாளமாகவும் மாறியது.
Help Poor Peoples
நடிகர் விஜயகாந்த் திரை உலகை தாண்டி உண்மையில் ஒரு மீசை வைத்த குழந்தை போன்றவர். வஞ்சகமற்ற நெஞ்சத்தால், கஷ்டப்படுபவர்களுக்கு ஓடி சென்று முதல் ஆளாக உதவி செய்பவர். உணவு கொடுத்து உபசரிப்பதில் ஏழைகளின் தோழனாகவே பார்க்கப்பட்டார். அதேபோல் திரை உலகைச் சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு பண உதவியை தாண்டி அவர்களின் பிள்ளைகள் படிக்கவும் படிக்கவும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.