கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்... தன் ராஜதந்திரத்தால் 4 மடங்கு அதிக லாபம் பார்த்த கமல்

First Published | Aug 7, 2024, 11:38 AM IST

கேட்ட சம்பளத்தை கொடுக்காத தயாரிப்பாளருக்கு தனது மாஸ்டர் மைண்ட் மூலம் பாடம் புகட்டி, நடிகர் கமல்ஹாசன் 4 மடங்கு லாபம் பார்த்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

Ulaga Nayagan Kamalhaasan

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் நடிகர் கமல் ஒரு ரோல்மாடலாக திகழ்கிறார். சினிமா அவருக்கு அத்துப்படி, அவருக்கு தெரியாதது சினிமாவில் எதுவுமே இருக்க முடியாது. புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகப்படு தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை கமலையே சேரும். இப்படி சினிமாவில் சகலமும் தெரிந்த கமலுக்கு, அதன் வியாபார யுக்தியிலும் எவ்வளவு கெட்டிக்காரர் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த கம்மியாக சம்பளம் தந்த தயாரிப்பாளரிடம் இருந்து அதைவிட 4 மடங்கு அதிக தொகையை தன் ராஜதந்திரத்தால் பெற்றிருக்கிறார் கமல். 

Kamalhaasan

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் பீஸ் படங்களுள் ஒன்று தான் அவ்வைசண்முகி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் கமலின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அவ்வை சண்முகி என்கிற பாட்டி கேரக்டரிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கமல்ஹாசன். வயதான பெண்ணாக நடித்து மட்டுமின்றி அந்த கேரக்டருக்கு ஏற்றவாரு குரலும் கொடுத்து அசத்தி இருந்தார் கமல். அவரின் உழைப்புக்கு கிடைத்த பரிசாக அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அமைந்தது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வர முடியாத அளவுக்கு பிசியா? அப்படி எத்தனை படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்? அவரின் லைன் அப் இதோ

Tap to resize

Avvai Shanmugi

அவ்வை சண்முகி திரைப்படத்தில் டூயல் ரோலில் நடிப்பதற்காக நடிகர் கமல் முதலில் ரூ.1.5 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். இவ்வளவு தர முடியாது என தயாரிப்பாளர் மறுத்திருக்கிறார். இதனால் சுதாரித்துக் கொண்ட கமல்ஹாசன், சரி நீங்கள் கொடுக்கும் சம்பளத்தோடு, அவ்வை சண்முகி படத்தின் குறிப்பிட்ட 4 ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை தனக்கு வழங்கிடுமாறு கேட்டிருக்கிறார். கமலின் இந்த டீலிற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி இருக்கிறார்.

avvai shanmugi kamal

அவ்வை சண்முகி திரைப்படம் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு, வசூலையும் வாரிக்குவித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தை கமல் வெளியிட்ட நான்கு ஏரியாக்களில் இருந்து மட்டும் அவருக்கு ரூ.5 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்தாம். இதன்மூலம் தயாரிப்பாளர் கொடுக்க மறுத்த சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகம் லாபம் பார்த்திருக்கிறார் கமல். இதன்மூலம் தான் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பாளருக்கு தனது மாஸ்டர் மைண்ட் மூலம் பாடம் புகட்டி இருக்கிறார் உலகநாயகன்.

இதையும் படியுங்கள்... என்ன ஒரு தாராள மனசு... வயநாடு மக்களுக்காக நிவாரண நிதியை வாரி வழங்கிய பிரபாஸ் - எத்தனை கோடி தெரியுமா?

Latest Videos

click me!