நடிகர் பிரஷாந்துக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா? ப்ரீத்தி தியாகராஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!
நடிகர் பிரஷாந்தின் தங்கை, ப்ரீத்தி தியாகராஜனின், லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் பிரஷாந்தின் தங்கை, ப்ரீத்தி தியாகராஜனின், லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையாகலாக இருக்கும் தியாகராஜன் பழம்பெரும் நடிகர், மற்றும் இயக்குனர் பெக்கெட்டி சிவராமின் மகன் சாந்தியை திருமணம் செய்து கொண்டார்.
பல வருடங்கள் தனக்கு திருமணம் ஆன தகவலையே அவர் மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாக சமீபத்தில் நடிகர் பிரஷாந்த் அந்தகன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது கூறி இருந்தார்.
'போட்' படம் எப்படி இருக்கு... சிறப்பு காட்சியை பார்த்து விட்டு அறிக்கை மூலம் விமர்சனம் கூறிய சீமான்!
இதற்க்கு காரணம் தன்னுடைய அம்மா தான் என்றும், அவர் கணவரின் புகழால்... குழந்தைகள் சுதந்திரம் பாதிக்கப்பட கூடாது என்பதால் அப்படி கூறினார். ஆனால் நான் வளர்ந்த பின்னர் வீட்டிற்கு வந்த சிலருக்கு என் தந்தைக்கு திருமணம் ஆகி 17 வயதில் மகன் இருப்பது தெரிந்ததால் பலர் என்னை நடிக்க வைக்க ஆர்வம் காட்டியதாக கூறினார்.
பிரஷாந்த் 12- தேர்வு எழுதிய கையோடு, 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் நடிக்க கிடைத்தது. இந்த படத்தில் பிரசாந்த் ஜாலிக்காக நடித்தாலும், இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்தது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், தன்னுடைய மருத்துவர் கனவை ஓரம் கட்டி வைத்துவிட்டு முழு நேர நடிகராக பிரஷாந்த் மாறினார்.
அடக்கடவுளே தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது இந்த பணத்தில் தானா? ஷாக் கொடுத்த பிரபலம்!
நடிகர் பிரஷாந்தை பொறுத்தவரை... 17 வயதில் இருந்து 52 வயது வரை எந்த ஒரு நடிகையுடனும் காதல் சர்ச்சையில் சிக்காதவர். ஒரு நடிகன் சுய ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவர்.
இவரை காதல் வலையில் வீழ்த்த சில நடிகைகள் வலை விரித்த போதிலும், அதில் சிக்காமல் பெற்றோர் தனக்காக பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரின் துரதிஷ்டம் அந்த திருமண வாழ்க்கை ஒரு மாதத்திலேயே முடிவுக்கு வந்தது.
நடிகர் பிரசாந்தை பொறுத்தவரை, அவருக்கு எல்லாமே அவரின் குடும்பம் தான். அப்பா, அம்மா, ஒரு நண்பர்கள் போல் இவருடன் பழகினாலும்... பிரஷாந்தை செல்லமாக அதட்டும் உரிமை அவரின் தங்கைக்கு மட்டுமே உரியதாகும்.
ப்ரீத்தி ஆசை பட்ட அனைத்தையும், ஒரு அண்ணனாகவும், அப்பாவாகவும் இருந்து செய்து வருகிறார். அதே போல் பிரஷாந்த் எந்த ஒரு விஷயமும் எடுப்பதற்கு முன் பெற்றோரை அடுத்து ப்ரீதியிடம் பேசுவார். அவர் எப்போதும் தன்னுடைய அண்ணனுக்கு சரியான விஷயங்களை மட்டுமே செய்வாராம்.
லண்டலில் MBA படித்துள்ள ப்ரீத்தி, பிரத்தேயாக நகை டிசைனிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் தந்தையின் பிஸ்னஸையும் கவனித்து வருகிறார். மிகவும் ஸ்டைலிஷான பெண்ணாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ..