இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், கூறிய 'மகாராஜா' படத்தின் கதை பிடித்த போதிலும்... புரடியூசர் கிடைக்காமல் போனதால், பிரபல நடிகர் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'குரங்கு பொம்மை'. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், விதார்த், பாரதிராஜா, 'அன்பே வா' சீரியல் நடிகை டெல்னா டெவிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூல் ரீதியான வெற்றியை பெற தவறியது.
24
Nithilan Swaminathan Maharaja Story
இந்நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டுகளைத் தொடர்ந்து, ஏற்கனவே தான் எழுதி வைத்திருந்த 'மகாராஜா' திரைப்படத்தின் கதையை தூசு தட்டி இயக்கும் முயற்சியில் இறங்கினார் நித்திலன். 'குரங்கு பொம்மை' படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தின் கதையை பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நித்திலன் கூறிய நிலையில், பலரும் இது ஒரு சென்சேஷனல் கன்டென்ட் என்பதால்... ஏதாவது ஒரு சின்ன இடத்தில் பிசங்கினாள் கூட அது வேறு மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் நடிக்கவும், தயாரிக்கவும், தயங்கினர்.
அந்த வகையில், நடிகர் சாந்தனுவிடமும் 'மகாராஜா' கதையை கூற.... அவருக்கு மகாராஜா திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதாம். பின்னர் பல தயாரிப்பாளர்களிடம் அழைத்து சென்று இந்த கதையை கூற வைப்பாராம். ஆனால் அவர் அழைத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நித்திலன் கூறிய இந்த கதை பிடிக்காத காரணத்தால், ஒரு கட்டத்தில் இந்த கதையை அப்படியே கிடப்பில் வைத்து விட்டு 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கியதாக நித்திலன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
44
Vijay sethupathi finally Join this movie
பின்னர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், போன்ற முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்த பின்னர்... தயாரிப்பாளர் கிடைத்ததாகவும் இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, 20 கோடியில் எடுக்கப்பட்டு, சுமார் 107 கோடிக்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கமர்ஷியல் வெற்றி யாரும் எதிர்பாராத ஒன்று என நித்திலன் கூறியுள்ளார்.