ரஜினிகாந்த் - கமல்ஹாசனையே நடிப்பால் மிரளவைக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? அப்பாவுடன் எடுத்த அரிய புகைப்படம்!

First Published | Jun 17, 2024, 6:59 PM IST

நடிகை ரம்யா கிருஷ்ணன், தந்தையர் தினத்தை முன்னிட்டு... அப்பாவுடன் எடுத்து கொண்ட தன்னுடைய அரிய புகைப்படங்களை வெளியிட அது படு வைரலாகி வருகிறது.
 

தன்னுடைய 53 வயதிலும், 30 வயது இளம் பெண் போல் பொங்கும் இளமையோடும்... அழகோடும்.. ஜொலிப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்கிற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன், இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

80-களில் கவர்ச்சிக்கு குறைவைக்காத நாயகியாக ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் தனி அடையாளத்தை பெற்று கொடுத்தது தமிழ் படங்கள் தான். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

எழில் எனக்கு புருஷன் மாதிரி.. எல்லாரையும் பதற வைத்த மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Tap to resize

ரம்யா கிருஷ்ணன், திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால், அது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த 'படையப்பா' திரைப்படம் தான். ரஜினிகாந்தை எந்த அளவுக்கு ரசிகர்கள் ரசித்தனரோ... அதே போல் நீலாம்பரி வேடத்தையும் ரசித்தனர். மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது, மற்றும் தமிழ்நாடு ஸ்டேட் விருதையும் பெற்றார்.

மேலும் பத்தி படங்கள் என்றாலும் ரசிகர்களின் கண்களுக்கு முதலில் வருவது ரம்யா கிருஷ்ணனின் முகமாக தான் இருந்தது. இவன் நடித்த ராஜகாளியம்மன் பொட்டம்மன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, நாகேஸ்வரி, போன்ற படங்களை திரையரங்கில் பார்த்துவிட்டு சாமியாடிய பக்தைகளும் உள்ளனர். ஒரு கட்டத்தில் திரையுலகில் இவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிய நிலையில்,  2003 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது மகன் ஒருவரும் உள்ளார்.

Sneha Son Workout: ஒர்க்கவுட்டில் சினேகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரின் மகன் விஹான்! வைரலாகும் புகைப்படம்!

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்திலும், சின்னத்திரையிலும் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கினார் ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் இவர் நடித்த கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம், நாகபைரவி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர், சீரியலில் இருந்து முழுமையாக விலகிய ரம்யா கிருஷ்ணன், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய அப்பாவுடன் எடுத்துக்கொண்ட சில அரிய புகைப்படங்களை இவர் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கனகாவை அசிங்க அசிங்கமா திட்டுவார்! அவரின் நிலைக்கு காரணமே இதுதான்? யாருக்கும் தெரியாத ரகசியத்தை கூறிய பிரபலம்!

Latest Videos

click me!