திரெளபதி 2 திரைப்படம் - சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ

Published : Jan 23, 2026, 02:45 PM IST

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, நட்டி நட்ராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் திரெளபதி 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Draupathi 2 Review

நாடகக் காதலை மையமாக வைத்து 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் திரெளபதி. அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இன்று நிலீஸ் செய்துள்ளது. மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

24
திரெளபதி 2 படக்கதை

சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான்.. இதை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்க, இதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த தரமான சம்பவங்கள் என்ன? என்பதே இந்த திரெளபதி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

34
பாசிட்டிவ் :-

முதல் பாதி போர் அடிக்காத அளவுக்கு சீன்கள் எல்லாம் வேகமாக நகர்ந்தது. டக்குனு முடிஞ்சது போல் இருந்தது. ஜிப்ரானோட பின்னணி இசை மற்றும் பாடல்கள் பல சீன்களுக்கு நல்ல உயிரோட்டமாக இருந்துது. கடைசியில் வரக்கூடிய திரௌபதி போர்ஷன் நல்லா பண்ணிருந்தாங்க. சில ட்விஸ்டுகளும் படத்தில் இருக்கு. மேக்கிங் பொறுத்தளவில் ஏஐ, லைவ் லொகேஷன், சிஜி என எல்லாத்தையும் போட்டு மேக் பண்ணிருக்காங்க.. லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் நன்றாக உள்ளது.

44
நெகட்டிவ் :-

படத்தின் ரைட்டிங் பெருசா கவரும்படி இல்லை. இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். திரைக்கதை ஓட்டம் பல சீன்களில் பெட்டரா பண்ணிருக்கலாம் என தோன்ற வைத்தது. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் வருகிறார்கள், அவங்க யாருக்குமே திடமான ரோல் இல்லையோனு ஃபீல் ஆனது. ஏஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் போர்ஷன்கள் எல்லாம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். ஹரி ஹர வீர மல்லு அளவுக்கு இல்லை என்றாலும். இந்த படத்திற்கு இது போதவில்லை. திரெளபதி 1 அளவுக்கு இப்படம் ரீச் ஆவது சந்தேகம் தான்.

Read more Photos on
click me!

Recommended Stories