Jailer 2 Review : ஜெயிலர் 2 அலப்பறை கிளப்பியதா? அடிவாங்கியதா? முதல் பாதி விமர்சனம்

Published : Oct 15, 2026, 07:13 AM ISTUpdated : Oct 15, 2026, 07:37 AM IST

Jailer 2 Movie Twitter Review : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் பாதி ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Jailer 2 Movie Twitter Review

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஜெயிலர். அப்படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்த படக்குழு, சுமார் 2 ஆண்டு கடின உழைப்புக்கு பின் அப்படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படத்தில் கூடுதல் ஸ்டார் பவரோடு களமிறங்கி இருக்கிறார் ரஜினிகாந்த். இம்முறை அவருடன் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹிருத்திக் ரோஷனும் கேமியோவில் மிரட்டி இருக்கிறார்.

26
ஜெயிலர் 2 ரிலீஸ்

ஜெயிலர் 2 திரைப்படம் ஆடியோ லாஞ்ச் இல்லாமல் ரிலீஸ் ஆகி உள்ளது. அதற்கு பதிலாக சூப்பர்ஸ்டாரின் ஸ்பெஷல் ஷோ என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். ஜெயிலர் முதல் பாகத்தை போல் இந்த படத்திலும் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வழக்கம்போல் அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்று ஜெயிலர் 2 உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் முதல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

36
ஜெயிலர் 2 ட்விட்டர் விமர்சனம்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் பாதி ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்துள்ளது. வழக்கமான கதைக்களத்தில் தொடங்குவதால் ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், கதை சூடுபிடித்ததும் நெல்சனின் ட்ரேட்மார்க் காமெடி நன்றாகக் கைகொடுக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளும், அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கின்றன. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடர்வதால், இதுவரை படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் செல்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

46
ஜெயிலர் 2 எக்ஸ் தள விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் டைட்டில் கார்டு, படம் முழுவதும் தெறிக்கவிடும் நெல்சனின் வித்தியாசமான நகைச்சுவைகள், மாஸ் பிரிட்ஜ் சீக்வென்ஸ், டீக்கடை காட்சி என முதல் பாதி ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறது. குறிப்பாக, இடைவேளைக் காட்சி வேற லெவல் மாஸாக அமைந்துள்ளது. மொத்தத்தில், நெல்சனின் ஸ்டைலில் அதிரடியும் நகைச்சுவையும் கலந்த விறுவிறுப்பான முதல் பாதி! நெல்சா வேறமாரி... ஹுக்கும் என பதிவிட்டுள்ளார்.

56
ஜெயிலர் 2 எப்படி இருக்கு?

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி அட்டகாசமாக அமைந்துள்ளது. படத்தில் வரும் டார்க் ஹியூமர் காட்சிகள் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளன. யோகி பாபுவின் காமெடி உச்சம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல் திரையில் தீயாக இருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை மாஸாக உள்ளது. குறிப்பாக, இடைவேளைக் காட்சியும் அதை அமைத்த விதமும் அருமை. ஒரு காட்சிகூட போரடிக்காமல், வேகமான திரைக்கதையுடன் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் மாஸான முதல் பாதி என குறிப்பிட்டுள்ளார்.

66
ஜெயிலர் 2 முதல் பாதி விமர்சனம்

முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே ஜெயிலர் 2 திரைப்படம் தொடங்குகிறது. ஆரம்பத்தில் ஜாலியாக நகரும் கதை, டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்துக்கு எளிமையாகவும் கம்பீரமாகவும் ஒரு மாஸ் அறிமுகத்தைக் கொடுக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக, நமோ நாராயணன் மற்றும் யோகி பாபுவின் எதிர்பாராத நகைச்சுவைக் காட்சிகள் பல இடங்களில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளன. வழக்கமான நெல்சன் பாணி நகைச்சுவை படத்துக்குச் சுவாரஸ்யம் சேர்க்கிறது. திரைக்கதை விறுவிறுப்பைப் பெறச் சற்று நேரம் எடுத்துக்கொண்டாலும், இடைவேளைக் காட்சியில் தூள் பறக்கிறது. மொத்தத்தில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த முதல் பாதியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories