Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்

Published : Oct 03, 2026, 02:24 PM IST

Sigma Review : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
15
Sigma Review by Blue Sattai Maran

இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, வெளிநாட்டில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்ததாக கூறப்பட்ட ஜேசன் சஞ்சய்யிடம் இருந்து புதுமையான முயற்சியை எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் பழைய கதையையும் அதே பாணியிலான அணுகுமுறையையும் மீண்டும் திரையில் கொண்டு வந்திருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sigma Review : இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா முழு விமர்சனம் இதோ

25
‘சிக்மா’ படத்தின் கதை என்ன?

படத்தின் கதைப்படி, நாயகன் தனது தந்தை வாங்கிய கடனால் சிக்கலில் இருக்கும் ஒரு பழைய நூலகத்தை காப்பாற்ற போராடுகிறார். அந்த நூலகத்தை வில்லனின் ஆட்கள் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்த சூழலில், சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணம் இருக்கும் லாக்கரின் சாவி நாயகனிடம் கிடைக்கிறது. அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நூலகத்தை கடனிலிருந்து மீட்டு காப்பாற்றுகிறாரா என்பதே படத்தின் பிரதான கதையாக அமைந்துள்ளது.

ஆனால், இந்தக் கதைக்கருவை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றத் தவறிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். கதையின் மையக்கரு மட்டுமின்றி, அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட திரைக்கதையிலும் எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

35
தாத்தா எஸ்.ஏ.சி படத்துடன் ஒப்பிட்ட ப்ளூ சட்டை

ஜேசன் சஞ்சய்யின் தாத்தாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தையும் தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்தப் படத்தில், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றங்களில் இருந்து தப்பிக்கும் நபர்களை, அதே சட்டத்தின் வழிகளைப் பயன்படுத்தி நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையின் மையமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்ற ஒரு புதுமையான சிந்தனையுடன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை உருவாக்குவார் என எதிர்பார்த்த நிலையில், பழைய பாணியிலான கதையை தேர்வு செய்து படமாக்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

45
மேக்கிங் மட்டும் போதாது!

படத்தில் இடம்பெறும் சேஸிங் காட்சிகள் மற்றும் மேக்கிங் ஓரளவு சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அவற்றுக்கான பாராட்டுகள் பெரும்பாலும் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளருக்கே செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படத்தின் அடிப்படை வலிமை அதன் கதையும் திரைக்கதையும் தான் என்றும், அந்த இரண்டு அம்சங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தால்தான் இயக்குநரின் முயற்சியை முழுமையாக பாராட்ட முடியும் என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

55
அடுத்த படத்தில் கவனம் தேவை

ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்கான கதையைத் தேர்வு செய்த விதமே மிகப்பெரிய குறையாக அமைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். சரியான கதையை தேர்ந்தெடுத்து, அதற்கு வலுவான திரைக்கதையை உருவாக்கியிருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து. மேலும், அடுத்த படத்தில் இன்னும் அதிகமான பயிற்சியுடனும், புதிய முயற்சிகளுடனும் ஜேசன் சஞ்சய் களமிறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில், ‘சிக்மா’ படத்தின் மேக்கிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைத் தாண்டி, கதை மற்றும் திரைக்கதையில் புதுமை இல்லாததால் படம் இம்பிரஸ் செய்யவில்லை என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

Sigma Day 1 Box Office : சிக்மா படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் நிலவரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories