அஜித் குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது அம்மாவுக்கு முதலமைச்சர் நேராக போன் செய்து எடுத்த உடனே சாரி கேட்டார். அது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. உங்கள் ஆட்சியில் இப்படி ஒரு கொடூரமான கொலையை செய்து விட்டு எப்படி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் நீங்கள் ‘‘சாரி’’ கேட்கிறீர்கள் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனாலும், ஒரு முதலமைச்சர் அவர் நேரடியாகப் பேசி ‘சாரி’ கேட்பது என்பது ஒரு பண்பு. அதை அவர் செய்து விட்டார். அதேபோல் விஜயும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் சென்று, ‘‘இது போல் நடந்ததுக்கு ஒரு வருத்தம் தெரிவித்தால் அது இன்னும்கூட ரொம்ப பெரிய விஷயமாக பேசப்படும். இந்த நிமிடம் வரை அவர் இரங்கலை சரியாக சொல்லவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அளிப்பதாகக் கூறி இருந்தார். அது இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை விஜயிடம் எடுத்துச் சொன்ன நிர்வாகிகள், ‘‘நாம் அறிவித்த நிவாரணப் பணத்தை விரைவில் கொடுத்து விட வேண்டும். இன்னும் தாமதம் செய்தால் அதுவும் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். விரைவில் அந்தப்பணம் அவர்களை போய் சேர்ந்து விட்டால் பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம’’ எனச் சொல்லி இருக்கிறார்கள்.
விஜயும் அதனை உணர்ந்து கொண்டு இன்னும் ஓரிரு நாட்களில் அந்தப்பணத்தை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து விடலாம்’’ எனக் கூறியிருப்பதாக சொல்கிறார்கள்.