யார் இந்த ஜெகத்ரட்சகன்.? இவ்வளவு சொத்து மதிப்பா.? சொகுசு விடுதி, கல்லூரியா.? தலை சுற்றவைக்கும் தகவல்கள்

Published : Oct 05, 2023, 09:22 AM ISTUpdated : Oct 05, 2023, 09:29 AM IST

திமுக நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அவருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

PREV
16
யார் இந்த ஜெகத்ரட்சகன்.? இவ்வளவு சொத்து மதிப்பா.? சொகுசு விடுதி, கல்லூரியா.? தலை சுற்றவைக்கும் தகவல்கள்
jagathrakshakan

யார் இந்த ஜெகத்ரட்சகன்

திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் தொடங்கி, அவருக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 இந்தநிலையில் யார் இந்த ஜெகத்ரட்சகன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் பிறந்தவர் ஜெகத்ரட்சகன். அதிமுகவில் இருந்தபோது, 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்டமன்ற உறுப்பினரானார். 

26
Jagathrakshakan

அதிமுக டூ திமுக

1984 ஆம் ஆண்டு அதிமுக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று  மக்களவை உறுப்பினரானார். 1998ம் ஆண்டு அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அப்போது ஜெயலலிதாவிற்கும்  ஆர் எம் வீரப்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டார் ஜெகத்ரட்சகன்.

 

36
Jagathrakshakan

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்

இதனை தொடர்ந்து தனியாக வீர வன்னியர் பேரவை மற்றும் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி  வந்தார். இந்த காலகட்டத்தில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி அழைப்பின் பேரில் ஜனநாயக முன்னேற்ற கழகத்தை  2009இல் திமுகவுடன் இணைந்தார். இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், பின்னர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  அப்போது பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது

46

சொத்து மதிப்பு என்ன.?

இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த அவர், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பட்டியலில் தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கூறி இருந்தார். அவருடைய பெயரில், ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன.

56

 கல்லூரிகள் எத்தனை தெரியுமா.?

அவரின் மனைவி அனுசுயா பெயரில் ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.  திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் தமிழகத்தில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களிலும் தனது கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாரத் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை,

ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி நாராயண மருத்துவ அறிவியல் கழகம், பாரத் அறிவியல், தொழில்நுட்பக் கழகம், ஸ்ரீபாலாஜி பிசியோதெரபி கல்லூரி, ஸ்ரீபாலாஜி நர்சிங் கல்லூரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. 

66

ஜெகத்ரட்சகனின் நட்சத்திர பேலஸ்

தமிழகம் கல்லூரிகள் மட்டுமில்லாமல் பல தொழில்களில் ஈடுபட்டு வரும் ஜெகத்ரட்சகள், சென்னையில் அக்கார்டு ஓட்டலும், மகாபலிபுரத்தில் புதிதாக தொடங்கியுள்ள்ள கால்டன் சமுத்ரா நட்சத்திர பேலஸ் அணைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

பல கோடி சொத்துக்கள் இருப்பதால் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமானவரித்துறை பல முறை திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியும் உள்ளது. அந்த வகையில் தான் மீண்டும் வருமான வரித்துறை வரி ஏய்ப்பு புகாரின் காரணமாக இன்று சோதனையில் இறங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்

காலையிலேயே முதல்வருக்கு அதிர்ச்சி தகவல்! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்துப்போட்ட வருமான வரித்துறை..!

Read more Photos on
click me!

Recommended Stories