இன்றைக்கு தேதி 19. அவர் கெடு விதித்த தேதியை தாண்டி நான்கு நாட்கள் கடந்து விட்டது. ஆனால் செங்கோட்டையன் எந்தவிதமான பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தவில்லை. வெளியிலும் தலை காட்டவில்லை. தொடர்ந்து அமைதி காட்டி வருகிறார். ஏன் அமைதியாகிவிட்டார் செங்கோட்டையன்? அவர் வழி தெரியாமல் தவிக்கிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். செங்கோட்டையன் டெல்லி சென்று வந்த பிறகு சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வந்தார். எனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி விசிட்டின் மூலமாக செங்கோட்டையனின் கலகக் குறல் அடக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஏற்கனவே செங்கோட்டையன் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். பிறகு மார்ச் மாதத்தில் அவர் டெல்லி சென்று அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், ‘‘ஆம், நான் மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் ’’ என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அந்த சந்திப்பிற்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் செய்திருந்தார். அதன் பிறகு தான் ஏப்ரல் பதிவிறக்கம் தேதி அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. அந்தக் கூட்டணி உறுதியானவுடன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக செங்கோட்டையன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஒன்றிணைக்கும் கருத்துக்களை தெரிவித்த நிலையில் அவர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.