மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தற்போது 'வாக்கு திருட்டு' விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை குறிவைத்து குற்றம்சாட்டி வருகிறார். நேற்று, டெல்லியின் இந்திரா பவனில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பல மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி திரையில் சில மொபைல் எண்களைப் பகிர்ந்து கொண்டார். அவர்களின் வாக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்திய ஜனநாயகத்தை நாசமாக்கியவர்களை தேர்தல் பாதுகாக்கிறது என்றும் கூறினார்.
அப்போது ராகுல் காந்தி திரையில் ஒரு எண்ணைப் பகிர்ந்து கொண்டார். அது பிரயாக்ராஜைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இப்போது அவருக்கு நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து அழைப்புகள் வருவதால் காவல்துறையில் முறையிட பரிசீலித்து வருகிறார்.