திமுக இந்த முறை தனித்து 200 தொகுதிகளை வெல்ல விரும்புவதால், கூட்டணியினருக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது. காங்கிரஸுக்கு 20-க்கும் குறைவாக 15 முதல் 18 தொகுதிகளை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டார்த்தினர் கூறுகின்றனர். திமுக தனி குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறிவித்துள்ளது. இதனால், திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் இழுபறி நிலவலாம் என கூறப்படுகிறது. திமுக-வின் கூட்டணியில் பிற கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன.
2011 சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதிகளை கேட்டு, 63 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், 2016ல் 60 தொகுதிகளை கேட்டு 40 தொகுதிகளை பெற்றது. 2021 தேர்தலில் 50 தொகுதிகளை கேட்க 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை கேட்டாலும் 15 தொகுதிகளில் ஆரம்பித்து 18 தொகுதிகள் வரை மட்டுமே திமுக கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2011 -ல் இருந்து திமுக, காங்கிரஸிற்கு கொடுக்கப்படுகிற தொகுதிகள் படிப்படியாக குறைந்து வருகிறது. 2026-ல் நன்றாகவே குறையும் என்கிறார்கள்.