விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!

Published : Dec 05, 2025, 05:40 PM IST

ஓபிஎஸ் பாஜகவுடன் இருக்கிறார். அப்படி 15ம் தேதிக்கு பிறகும் பாஜக முடிவு எடுக்கிறார்,  என்.டி.ஏ கூட்டணியில் ஓ.பி.எஸ் இணைகிறார் என்றால் மீண்டும் இந்த அதிமுக உரிமை மீட்பு ஒருங்கிணைப்பு குழு மறுபடியும் உடைய வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார்கள்.

PREV
14

ஏற்கனவே ‘‘டிசம்பர் 15ஆம் தேதி அரசியல் திருப்புமுனை ஏற்படும்’’ என கெடு விதித்திருந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். இந்நிலையில் திடீரென அவரே எதிர்பார்க்காத வண்ணம் டெல்லி பாஜக தலைமை அவரை அழைப்பில் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். டெல்லியில் இந்த சந்திப்புக்கு ஆடிட்டர் வழித்தடம் போட்டது ஆடிட்டர் குருமூர்த்தி என்கிறார்கள்.

ஒருங்கிணைந்த அதிமுக என்கிற முடிவுக்கு வரவில்லை என்றால் டிசம்பர் 15-ம் தேதி நான் வேறு முடிவு எடுப்பேன் என ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அமித் ஷாவுடனான சந்திப்பில் ‘‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஏன் அந்த முடிவெல்லாம் எடுக்குறீங்க? என அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு ஓபிஎஸ், ‘ஒருங்கிணைந்த அதிமுகதான் பலம் என நாங்களும் பலமுறை பேசி விட்டோம். ஆனால், அதற்கு பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் இந்த முறை டிசம்பர் 15க்கு பிறகு நாங்கள் வேறு முடிவு எடுக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம். என்னை நம்பி வந்தவர்களுக்கு நானும் ஏதாவது செய்யவேண்டும் இல்லையா? எவ்வளவு நாள் தான் இப்படியே முடிவெடுக்காமல் வைத்திருப்பது?’’ என ஓபிஎஸ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

24

அதற்கு அமித் ஷா, ‘‘சரி, உங்களை நம்பி வந்தவர்களையும் பாக்கவேண்டும் இல்லையா? அப்படி என்றால் ஒரு 12 லிருந்து 15 சீட்டுகள் வரை பாஜகவின் கோட்டாவில் ஒதுக்குவதற்கான விஷயங்களை பேசலாம். நீங்கள் இன்கேயே இருங்கள். எல்லாமே சரியாகும்’’ என சில விஷயங்களில் நம்பிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பு தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் எங்கள முடிவில் தெளிவாக இருப்போம் என்கிற ரீதியில் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் பேசப்பட்டு இருக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முடியட்டும். அதற்குப் பிறகு நான் தமிழ்நாட்டுக்கு வருகிறேன். வந்த பிறகு எல்லாம் பேசிக்கொள்ளலாம். அவசரம் வேண்டாம். கொஞ்சம் பொறுமையா இருங்கள்’’ என அமித் ஷா நம்பிக்கையூட்டி அனுப்பி இருக்கிறார் என ஓபிஎஸ் பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

பாஜகவுக்கு தவெக தலைவர் விஜய் கொஞ்சம் ஷாக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன் திடீரென தவெகவில் போய் சேர்ந்துவிட்டார். அவர் இப்போது அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கியமான பலரை தவெகவில் இணைய அழைப்பு விடுத்து வருகிறார். மற்றொரு புறம் தவெக தலைமையில ஒரு மெகா கூட்டணி உருவாகலாம். அதில், டிடிவி. தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி என மெகா கூட்டணியை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். இப்படி தவெக தலைமையில ஒரு மூன்றாவது பெரிய அணி உருவானால் வாக்குகள் சிதறும். அது மறுபடியும் திமுக வெற்றிக்கு உதவியாகி விடும் என பாஜகதரப்பு அச்சப்படுகிறது. மூன்றாவது அணியில் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு இணைந்தால் நிலைமை மாறிவிடும். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஓ.பி.எஸை அழைத்து பாஜக தலைமை பேசி இருக்கிறார்கள் எனவும் தகவல்கள்.

34

மற்றொருபுறம் பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை தரப்பு அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருமே என்.டி.ஏ கூட்டணில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க முடியும். எல்லோரும் ஒருங்கிணைந்து வேகமாக, உற்சாகமாக எல்லா மாவட்டங்களிலும், தொகுதிகளிலும் வேலை பார்க்க முடியும். அவர்கள் இல்லாமல் போனால் அது மறுபடியும் தோல்விக்கு வழி வகுக்கும். ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் வேண்டுமானால் நாம் வெற்றி பெறலாம். பரவலாக தமிழ்நாடு முழுக்க வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை என அவரது டீமும் தனியாக ஒரு ரிப்போர்ட்டையும் டெல்லி பாஜகவுக்கு அனுப்பி இருக்கிறது. இப்படி பலவற்றையும் ஆலோசனை செய்துதான் ‘‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் பாத்துக் கொள்கிறேன்’’ என உத்தரவாதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார் அமித் ஷா என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

ஒருவேளை பாஜக கோட்டாவில் 12 சீட்டுகளுக்கு ஓபிஎஸ் தரப்பு ஒத்துக் கொண்டால், இங்கே என்ன நடக்கும்? என ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேசினால், “எங்கள் தரப்பை பொறுத்தவரை ஒருங்கிணைப்பு குழுவினர் இருக்கிறார்கள். உரிமை மீட்பு கழகத்தினர் எல்லோரும் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சர்வே எடுத்துள்ளோம். என்.டி.ஏ கோட்டாவை ஏற்றுக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். வேறு விஷயங்கள் அதிமுகவில் நடக்கவேண்டும். அதிமுகவில் மறுபடியும் பழையபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட வேண்டும்.

44

எடப்பாடி பழனிசாமி கையில் ஒற்றை அதிகாரம் இருக்கக்கூடாது. கட்சி, அதிகாரம் முன்பு போல மாற வேண்டும்.

ஓ.பி.எஸுக்கு அதிகாரம் வேண்ட்டும். அப்படி என்றால் மட்டும்தான் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இதற்கு வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. அதனால், பாஜக கூட்டணி வேண்டாம் என்பதுதான் பெரும்பாலான எங்களுடைய நிலைப்பாடு. காரணம், நாங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தாலும் எங்கள் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி முதல்வராகத்தான் ஆதரவளிக்க வேண்டும். எங்களை ஒதுக்கி வைப்பவரை நாங்கள் ஏன் முதல்வராக்க வேண்டும். எங்களை அதிமுகவுடன் மீண்டும் இணைக்க வேண்டும். இந்த ஒற்றைக் கோரிக்கை மட்டுமே எங்களது முடிவு. இதைத்தான் அமித் ஷாவுடன் பேசி இருக்கிறார் ஓ.பி.எஸ். அதிமுகவில் நாங்கள் மீண்டும் பலம்பெற வேண்டும்.

அதையும் மீறி ஓபிஎஸ் கொஞ்சம் பாஜகவுடன் இருக்கிறார். அப்படி 15ஆம் தேதிக்கு பிறகும் பாஜக முடிவு எடுக்கிறார், பாஜக கோட்டாவில் என்.டி.ஏ கூட்டணியில் ஓ.பி.எஸ் இணைகிறார் என்றால் மீண்டும் இந்த அதிமுக உரிமை மீட்பு ஒருங்கிணைப்பு குழு மறுபடியும் உடைய வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள். அதிமுகவில் இணைவது மட்டுமே தங்களது ஒரே எண்ணம் என்கிற அவரது ஆதரவாளர்களின் முடிவால், புலிவாலை பிடித்த கதையாகி இருக்கிறது ஓ.பி.எஸின் நிலைமை.

இதைத் தொடர்ந்தே செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''டெல்லி சென்று அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவரிடம் தமிழக அரசியலின் இன்றைய சூழ்நிலை குறித்து பேசினேன். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை அவரிடம் எடுத்துரைத்தேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக நான் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக சொல்லவே இல்லை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' எனத் தெரிவித்தார். இதனையடுத்து அதிமுகவில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories