
‘‘இந்து கோவிலை இடி என்று தீர்ப்பு கொடுத்தா கோர்ட் வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுங்கள் என்று சொன்னா கோர்ட் வேண்டாமோ?’’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘இன்றைக்கு திமுக அரசு சிக்கந்தர் மலை என புதிய பெயர் வைக்கிறார்கள் அதை ரசிக்கிறார்கள். சிக்கந்தர் மலைக்கு இவர்கள் பெயரை வைத்துக் கொண்டு, ராமநாதபுரம் எம்.பி., திருப்பரங்குன்றம் மலையில் போய் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார், அதை ரசிக்கிறார்கள். நெல்லி தோப்புக்கு போய் நாங்கள் ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்று சொல்கிறார்கள், அதை ரசிக்கிறார்கள். அதை எதிர்த்து எங்கேயுமே திமுக அரசு போகவில்லை. அதை எதிர்த்து இந்து மதத்தை நம்பிக்கையாக வழிபடக்கூடிய பக்தர்கள் போனார்கள். ஒரு மாதத்திற்கு முன்னால் அக்டோபர் 2025 ல் சென்று கோர்ட்டில் உத்தரவு வாங்கினார்கள்.
இன்றைக்கு இவ்வளவு ஆர்வமாக தர்காகாரர்கள் செய்கிற வேலையை எல்லாம் கோவிலுடைய ஒருங்கிணைப்பு அதிகாரி செய்கிறார். ஆனால் அன்றைக்கு நெல்லித்தோப்பில் போய் ஆடு வெட்டலாம், கோழி வெட்டலாம் என சொன்னபோது இந்த கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. சிக்கந்தர் மலை என்று பெயர் சொன்னார்கள். ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த எம்.பி., 100 பேரை கூட்டி போய் சிக்கல் பிரியாணி சாப்பிடுகிறார், அதை ஏன் எதிர்க்கவில்லை. அன்றைக்கு எங்கேயுமே எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இன்று அந்த நீதிபதி தீர்ப்பில் அதையும் குறிப்பிட்டு இருக்கிறார். திமுக அரசு அதை நிராகரிக்கவில்லை.
இன்று இந்து பக்தர்கள் வழக்கு தொடர்ந்ததால் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒருதலைப் பட்சமாக தமிழகத்தில் இந்து மதத்தை நம்பக்கூடிய பக்தர்களுக்கு எதிராக மிக முக்கியமாக மோசமான அரசியலை திமுக செய்கிறது. என் கையில் இருக்கக்கூடிய லிஸ்டில் தமிழகத்தில் எங்கே எல்லாம் இந்து கோவில்களை இடித்தார்கள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கெல்லாம் இந்து கோயில்களை இடித்தார்கள், கோவையில், முத்தாலம்மன் கோயில், சென்னை, மின்ட் ரோட்டில் வீர விநாயகர் கோவில், தஞ்சாவூர் குபேர விநாயகர் கோவில், கீழவாசல் ஆதி மாரியம்மன் கோவில், அரியலூர் மாவட்டம், சனீஸ்வர பகவான் கோயில் என 161 கோயில்கள் என லிஸ்ட்டை தாண்டும்.
அதில் சில கோர்ட்டு தீர்ப்பு கொடுத்தது என்கிறார்கள். கோர்ட்டு எப்போது தீர்ப்பு கொடுத்தது? சாயங்காலம் தீர்வு கொடுத்தார்கள். கோயிலை எப்போது எடுத்தீர்கள்? அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு. அப்போது கோர்ட்டு வேண்டும். அதாவது சில இந்துக் கோயில்களை இடிக்கும் பொழுது கோர்ட்டு சொன்னார்கள் நாங்கள் இடிட்தோம் என்றார்கள். இரவு ஆர்டர் வந்தால் காலையில் இரண்டு மணிக்கு இடித்தார்கள். அன்றைக்கு கோர்ட் வேண்டும். ஒரு கோவிலை இடி என்று கோர்ட்டு தீர்ப்பு கொடுத்து, உடனே காலையில் 2 மணிக்கு இடிக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அதே கோர்ட் திருப்பரங்குன்றம் மலையின் மீது தீப தூணில் தீபத்தை ஏற்றுங்கள் என்று சொல்லும் பொழுது இவர்களுக்கு கோர்ட் வேண்டாம்.
கிட்டதட்ட 161 கோயில்களை இடித்ததில் பல இடங்களில் நீதிமன்ற உத்தரவே இல்லை. எந்த ஆர்டரின் மூலம் அவர்கள் இடித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது எத்தனை சர்ச், எத்தனை மசூதிகளை சட்ட விரோதமாக இடித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 மே 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு சர்ச், மக்கள் பயன்படுத்தக்கூடிய இடம் என்று கூறுகிறார்கள். அதை இடித்தார்களா? கிடையாது. எத்தனை மசூதிகளை இடித்து இருக்கிறார்கள்? கிடையாது. தமிழகத்தில் எந்த சர்ச்சும், மசூதியும் ஆக்கிரமிப்பு இடங்களில் இல்லையா? இருக்கிறது. ஆனால் என்ன ஒரு நியாயம்? இதையெல்லாம் இடிக்க மாட்டீர்கள்? எல்லாருக்கும் அவர்கள் பாதையில் வழிபாட்டு உரிமையை கொடுங்கள். அதைத்தான் நாம் கேட்கிறோம். ஒருதலை பட்சமாக 121 கோவில்களுக்கு மேல் இடித்து விட்டு இன்றைக்கு உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்த பிறகு அதை பின்பற்ற மாட்டோம் என்று சொல்லி மிகப்பெரிய சட்டப் பிரச்சினை உருவாக்கி நாடாளுமன்றத்தில் போய் பேசுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய நிலைமை என்ன? நாடாளுமன்றத்தில் இவர்கள் போய் இந்தியாவில் மதத்தை கெடுத்து விட்டோம் என்று பேச வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி போட்டு விட்டோம் என்று பேச வேண்டும். ஒரு நீதிமன்றம் கொடுத்து தீர்ப்பை செயல்படுத்தவில்லை என்று பேச வேண்டும். ஆனால் அங்கே போய் திமுக எம்பிக்கள், காங்கிரஸ் எம்பிக்கள், விசிக எம்பிக்கள் தமிழகத்தில் இந்து மதவாத சக்திகள் தமிழகத்தில் ஜாதி கலவரத்தை கலவரத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள். இது எப்படி இந்து மத சக்தியாகும்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.