திருப்பரங்குன்றம் தீப ஏற்றல் விவகாரத்தில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு முழு முதல் காரணம் அங்குள்ள இஸ்லாமிய மக்கள்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ‘‘திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரமலைக்கள்ளர்களுக்கோ, அங்கே இருக்கிற இஸ்லாமியர்களுக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இப்ப புதுசா நான் போய் கெடா வெட்டுவேன், பிரியாணி கொடுப்பேன், ரத்தப்பலி காண்பிப்பேன் என்று சொல்லும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. இது தேவையில்லாத விஷயம். அங்க இருக்கிற கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெரு மக்களும், நாங்களுமே இன்னை வரைக்கும் ஒண்ணா வாழ்ந்துட்டு இருந்துட்டு இருக்கிறோம். எங்களுக்குள்ள எந்த பிரிவினையும், சண்டை சச்சரவுகளும் இல்லை.