சென்னையில், பாஜக மையக்குழு கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல் விஜய் இஸ் தி ஸ்பாய்லர் (ஆட்டத்தை குலைப்பர்) எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தவெக வாக்குகளால் தே.ஜ.கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டுமென்றும் கோயல் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக காலை நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் விஜய் குறித்து முதலாவதாக விரிவாக பேசப்பட்டு உள்ளது. விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவது பற்றி கேட்டறிந்துள்ளார் பியூஸ் கோயல். அப்போது, விஜய் தரப்பிடம் கூட்டணிக்கு பல வகைகளில் அழைத்ததாகவும், அவர் பாஜக கொள்கை எதிரி எனக் கூறி, திமுக, பாஜகவுடன் கூட்டணிக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிற தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் எடுத்துக் கூறி உள்ளனர்.