பின்னர் லீலாபேலஸ் நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சந்தித்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டு, பேச்சுவார்த்தையை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை → தொகுதி ஒதுக்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடந்தது. பாஜக தரப்பில் 50 முதல் 75 தொகுதிகள் வரை கோர வாய்ப்பு இருப்பதாகவும், சிறு கூட்டணி கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கீட்டில் கணக்கிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தரப்பில் அதிகபட்சம் 60 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உடனடி முடிவு எட்டப்படவில்லை எட்டப்படவில்லை, மேலும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி உறுதியாக உள்ள நிலையில், தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இரு கட்சிகளும் திமுகவை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட தீவிரம் காட்டி வருகின்றன. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.