2024,பிப்ரவரியில் நடிகர் விஜய் தவெகவை தொடங்கி மாநாடு, மக்கள் சந்திப்பு, பொதுக்குழுவை நடத்தி வருகிறார். இதனிடையே, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி பல மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமித்தார்.
இதில், பல மாவட்டங்களில் பதவி தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொத்தம் 131 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 120 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு பல மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனால் கட்சிக்குள் பல சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விடுப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்பட பதவிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு ஆணைகளை வழங்கவுள்ளார்.