விஜய் கிறிஸ்தவ சமூகத்துடன் நெருக்கமாக இருப்பதாகவும், தவெக கிறிஸ்தவ வாக்குகளை குறிவைப்பதாகவும் கூறப்படும் நிலையில், சென்னை லயோலா, செயிண்ட் ஜோசப் போன்று முன்பு தமிழகத்தின் டாப் கிறிஸ்தவ கல்லூரிகளில் ஒன்றான பாளையங்கோட்டை, புனித சவேரியார் கல்லூரியைச் சேர்ந்த முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்கல்லூரியின் முதல்வர் காட்வின் ரூபஸ்,தேவாலயத்தில் நிகழ்த்திய உரையில், ‘‘நான் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் எடுத்து படிக்கப்போகிறேன் என்று குட்டிப்பையன் சொல்கிறான். நம்ம புள்ளைங்கைகிட்ட கேட்டுப்பாருங்க.. விஜய் ரசிகராகப்போறேன் 41 பேரை கொன்று குவித்தவனுக்கு எல்லோரும் இப்படி கையை தூக்கி காட்டணும் (விஜய் தலைவா படத்தில் கையை தூக்கிக் காட்டுவது போல கைகளை தூக்கி காட்டி பேசுகிறார்) நாமெல்லாம் விலங்கி போட்டால்தான் கையை இப்படி வைப்போம். இல்லையா? இந்தத் தலைவர் கையை இப்படிப்போட்டுக் கொள்கிறார். நான் ஏற்கெனவே விலங்கு போட்டு இருக்கிறேன் என்று காட்டுகின்ற அவர் பின்னால் செல்லுகின்ற கூட்டம் அதிகமாய் போய்க்கொண்டு இருக்கிறது.