
மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பேச்சுகள் பெரும்பாலும் மக்கள் பணிகளை மறந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதையே முழுநேர கொள்கையாகக் கொண்டுள்ளதாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தது என்றும், தற்போது மத வெறுப்பைத் தூண்டுகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். வக்பு சட்டத் திருத்தம், இந்தி திணிப்பு, கோயில் நிர்வாகம் போன்ற விவகாரங்களில் பாஜக அரசை எதிர்த்து பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் அரசு திமுக அரசின் நடவடிக்கையை ஆதரித்து பேசியதால், இந்து அமைப்புகளால் இவரை இந்து விரோதி என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
அவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பேச்சுகள் இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அவசியமில்லாத விஷயத்தில் எல்லாம் முந்திரிக் கொட்டை தனமாக தானாக முன் வந்து சர்ச்சையை கிளப்புகிறார். சம்பந்தப்பட்ட மக்கள் பிரச்சினை என்றால் கண்ணை மூடிக்கொண்டு, வாயையும், காதையும் பொத்திக் கொண்டு கிடக்கிறார். பூமிக்கு திரும்பிவந்த அதே ராக்கெட்டில் விண்ணுக்கு இவரை நிரந்தரமாக அனுப்புவது மிக மிக சிறந்தது என கொந்தளித்துக் கிடக்கிறார்கள் மதுரை மக்கள்.
இந்நிலையில், ‘‘சிவபெருமானுக்கு எச்சில் இறைச்சியைப் படைத்த கண்ணப்ப நாயனாரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் 'இந்து அல்ல' என்று கூற முடியுமா? என புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் சு.வெங்கடேசன். “சிவனுக்கு படைத்ததை மனிதர்கள் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்கு படைத்ததை எல்லோரும் சாப்பிடலாம். சரி, சைவ உணவு மட்டுமா? கண்ணப்பன், சிவனுக்கு என்ன படைத்தான்? மாமிசத்தை படைத்தான்.அதுவும் வாயால் கவ்விக் கொண்டு வந்த மாமிசத்தை.. எச்சில் மாமிசத்தை சிவனுக்கு படைத்தான். சிவன் சாப்பிட்டான். இந்த ஆர்.எஸ்.எஸ்வாதிகள் சிவனுக்கு மாமிசத்தை, எச்சில் மாமிசத்தை படைத்த கண்ணப்பன் இந்து அல்ல என்று சொல்ல இவர்கள் தயாரா? சுத்த பிராமணன் ராமனுக்கு குகன் மீன் கொடுத்தான். ராமன் ஒரு நிமிடம் முனிவர்களை திரும்பி பார்த்தான். பார்த்து விட்டு புன்னகை புரிந்தான் என்று எழுதுகிறான் கம்பன்.
நூற்றுக்கணக்கான கோழிகள் படைக்கிறார்கள், ஆடுகள் படைக்கிறார்கள், சாராயம் படைக்கிறார்கள், சுருட்டு படைக்கிறார்கள் இவ்வளவு வேறுபாடும் கொண்டதுதான் இந்திய இறை மரபு. இந்திய ஆன்மீக மரபு. இவ்வளவு வண்ணங்களை கொண்டதுதான் எங்கள் உணவு மரபு முறை. ஆனால். இந்துத்துவாவாதிகள் பிரமாணிய பண்பாட்டு முறை தான் இந்து பண்பாடாகவும், இந்திய பண்பாடாகவும் முன் வைப்பதை இன்றைக்கு பண்பாட்டு உலகில் நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது’’ எனப் பேசியுள்ளார்.
அவரடு இந்தப்பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பேசும் சு.வெங்கடேசன் அவர் எம்.பியாக இருக்கும் மதுரையை இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்களில் முதலிடத்தில் வைத்திருக்கும் பெருமைக்கு சொந்தக்காரர்.
தமிழகத்திலிருந்து அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் அந்த விருதின் மாண்பையும், மரியாதையையும் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதில்லை.
தகுதி இல்லாத ஒருவருக்கு, அந்த விருதை வழங்கிய சாகித்ய அகாடமி, தற்போது ஏன் அந்த விருதை இவருக்கு வழங்கினோம் என்று தலையில் கை வைக்கிறது. சு.வெங்கடேசனின் சமீபகால நடவடிக்கைகள், விருது பெற்ற அந்த, 'வேள்பாரி' என்ற புதினத்தை இவர் தான் எழுதினாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இருபதாயிரம் ரூபாய் செலவில் ஓர் ஓலை கொட்டகை போட்டு, 2 லட்சம் ரூபாய் கணக்கு காட்டிய இந்த நேர்மையாளர் தான், 'திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்து விட்டு, நாளை ஓய்வு பெற்ற பின், ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்' என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பி.தனபாலை சாடியவர். தான் ஒரு எம்.பி., இந்த உலகமே தனக்கு கீழ்தான் என்பது போல், அவரது பேச்சில் தான் எத்தனை அகந்தை, திமிர். இவரை எதிர்த்தும் மதுரை மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை மறந்து விட்டார் போலும்!
'எந்த துறை என்றாலும், எத்தகைய உயரிய பதவியில் இருந்தாலும், எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன் தான்' என்ற அவரது பேச்சு அவருக்கே பொருந்தும். இப்படி, அவர் தன்னை தானே விமர்சித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவரது ஆட்சி காலத்தில், 'மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் திட்டம்' எனும் ஓர் அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, மக்கள் பிரதிகளில் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனில், அத்தொகுதி பிரதிநிதியை அவர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் அமலுக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், இன்றைய நிலையில், எத்தனையோ பேர் அழைக்கப்பட்டிருப்பர் என்றாலும், முதலாவது வெங்கடேசனை அழைத்திருப்பர்.
மதுரை வெங்கடேசன் தமிழர்களின் விரோதி. மலையாளிகளின் ஆதரவாளர். தமிழராக இருந்திருந்தால் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீரை 142 அடிக்கு உயர்த்த நீதிமன்றம் உத்தரவு இருந்தும் அதை திறக்கவிடாமல் 136 அடி தண்ணீர் எட்டியவுடன் உடனே தண்ணீரை திறக்கச்சொல்லி நிர்பந்தம் செய்யும் கேரள அரசை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாதவர். கீழடி அகழ்வாய்வு கிடைத்த தமிழர்களின் சின்னங்களை திராவிட நாகரிகம் என்றவர். இவையெல்லாம் எம்.பியாக்கிய மதுரை மக்களை சொல்ல வேண்டும். மதுரை ரயில்வே டிவிஷனில் காலியாக இருந்த இடங்களுக்கு திருவனந்தபுரத்தில் தேர்வாம். ஏன் தமிழ்நாட்டில் இடங்கள் இல்லையா? மண்டல அலுவலகமே சென்னையில் உள்ளது. அதை விடுத்து மலையாளிகளையும், கம்யுனிஸ்ட் தொண்டர்களையும் உள்ளே நுழைக்கமுயற்சி செய்த தமிழின துரோகி இவர்’’ என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் நடுநிலை மக்கள்.