நாம அரசியலுக்கு வந்ததும் கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மத்தவங்களோட நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும்’ என்கிறார் தவெக தலைவர் விஜய் விஜய்.
விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' என்கிற அளவுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' என அரசியல் டச்சோடு பேசி முடித்திருக்கிறார். 31 சதவிகிதம் அளவுக்கு தவெகவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறி வந்தாலும், குறைந்தபட்சமாக 20 சதவிகித வாக்குகளாவது தங்களுக்கு கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20% சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்கும எனவும் நம்புகிறார்கள். காரணம், விஜய்யே ஒரு கிறிஸ்தவர், சிறுபான்மையினர்.