அடுத்து நம்முடைய சகோதரர் இனிகோ இருதயராஜ் கோரிக்கையை ஏற்று விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கல்லறை தோட்டங்களை அமைக்க அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதியை விடுவித்திருக்கிறோம்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் இணைந்ததே தமிழ்நாடு. "மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது” என தெரிவித்தார்.