அங்கே வாசலில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி உட்கார்ந்து இருப்பார். அவருக்கு நாலு லட்சம் பேர் கிடையாது. அவரை பொறுத்தவரை 8 லட்சம் கால்கள். அவர் யார் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். ஸ்டேஷனுக்குள் இருந்து வருபவர்களில் கால்களில் யார் செருப்பு அறுந்து இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். யாரால் தன்னுடைய இன்றைய பிழைப்பு நடக்கும் என்பதை மட்டும்தான் பார்ப்பார். செருப்பு தைப்பவருக்கு அது 8 லட்சம் காலுதான். நாலு லட்சம் ஆளு இல்லை. அதைப்போல ஷாலினிக்கு எல்லோருமே பேஷண்டுதான்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு அவருக்கு தலைவர் விஜய், தலைவர் விஜய் என்றவர் ஐயய்யோ பாவம் என மனநோயாளிக்கு ஈடாக அவரை பார்க்கிறார். அவங்களுக்குள்ள சைக்ரியாசிஸ்ட் முழித்துக் கொண்டு விஜய்க்கு தேவை சைக்காலசிஸ்டா, சைக்ரியாசிஸ்ட்டா என்கிற கோணத்தில் ஷாலினி அணுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர் என்ன பாடு பட்டு இருப்பார். அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்கிறார் ஷாலினி. உங்ககிட்ட சொன்னாய்ங்களா? அது எங்களுக்குத் தேவையா? அவருக்கு சைக்காலசிஸ்ட் ஆலோசனை தேவையா? இல்லை குனிய வைத்து ஊசி குத்தணுமான்னு நீங்க முடிவு பண்ணுங்க. எனக்கு அவர் விலகி விலகி ஓடிவருது பதற்றமாக இருக்கு.