திமுக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியாக, ஆளும் கட்சியாக இருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் தொண்டர்கள் இடையே தலைமை மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு, கட்சியின் அடிப்படையே தெரியாதவர்களை முன்னிலைப்படுத்துவது, பாரம்பரிய தொண்டனை கண்டுகொள்ளாமல் இருப்பது என கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தப்போக்கு சமீபக காலமாக பெரும் அதிருப்தியாக வெடித்துக் கிளம்பியுள்ளது.
அதற்கு மிகப்பெரிய ஆதாரமாக திமுக தொண்டர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தொண்டர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘தலைவர் ஸ்டாலினிடம் நான் வேண்டிக் கொள்வது, நமது கழகத்தில் லட்சக்கணக்கான கிளைச்செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இது நமது கழகத்தின் அடிப்படை. சாதாரண தொண்டர்கள்தான் திமுகவின் முதுகெலும்பு, கழகத்தின் ஆணிவேர். அவர்கள் நல்லா இருக்கிறார்களா என்று பார்த்தீர்களா? அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அதை முதலில் பாருங்கள் தலைவரே.