இதுதான் கரூரின் உண்மை கண்டறியும் குழுவா..? அப்பட்டமான திமுக-வின் விசுவாசிகள்..! அம்பலமான ஆதாரம்..!

Published : Oct 17, 2025, 10:35 PM IST

சிபிஐ வழக்கை கையில் எடுக்கவிருக்கையில் இவர்கள் ஏன் ஓடோடி சென்று யாராக் காப்பாற்ற முனைகிறார்கள். பெருந்துயரம் நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்களும், தமது உறவுகளை இழந்தவர்களும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்.

PREV
15

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை ஒருதலைபட்சமாக தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மை கண்டறியும் குழுவினர் திமுக சார்பு நிலையைக் கொண்டவர்கள் என பலத்த குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கான ஆதாரங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது உண்மை கண்டறியும் குழுவா? இல்லை திமுகவின் தேர்தல் கால பரப்புரையாளர்களின் குழுவா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

25

பேரா.சரஸ்வதி:

திமுக ஆதரவு இயக்கமான திக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் இணையர். ஈழ இன அழிப்பை நடத்திய காங்கிரஸ் அரசுக்கு துணை நின்ற இனப்படுகொலை கூட்டுக் குற்றவாளியான திமுகவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற Transnational Government of Tamil Eelam அமைப்பை ஆதரவு அமைப்பாக மாற்றியதில் முக்கியமானவர்.

கிறிஸ்டினா:

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிறிஸ்டினா சாமி. திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர். இவரும், இவரது கணவர் ஆரோக்கியசாமியும் சேர்ந்து கரூரில் அரெட்ஸ் AREDS, SWATE ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் உலகின் பல நிதி உதவியளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்துள்ளது. முக்கியமாக CCFD-France World Solidarity, an organisation of Christian Workers Movement in Belgium (WSM) ஆகிய இரண்டும் கிறிஸ்டினா சாமியின் முக்கியமான நிதி மூலங்கள். கிறிஸ்டினாவுக்கு கிறிஸ்துகள் காசு கொடுக்கிருக்கிறார்கள் என்று மதவாத அடிப்படையில் விமர்சித்துள்ளது வினவு என்ற ம.க.இ.க அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்.

35

தோழர் செல்வி:

மனிதி என்ற இடதுசாரி பெண்ணிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். மார்க்சிஸ்ட் வலதுசாரி சிந்தனையாளர். 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக - இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களுள் ஒருவர்.

இது போன்ற நபர்களைக் கொண்ட குழுவை உண்மை கண்டறியும் குழு என்று சொல்ல முடியுமா? திமுகவின் தேர்தல் கால பரப்புரையாளர்களின் குழு என்றுதானே சொல்ல முடியும்.

இவர்களைப் போன்ற ப்ராக்ஸி அமைப்புகளை, தேர்தல் கால திமுக ஆதரவாளர்களை ஒருவர் பின் ஒருவராக பேச வைப்பதும், உண்மை அறியும் குழு என்ற பெயரில் கரூருக்கு அனுப்பி கள ஆய்வு போன்ற வேலைகளை செய்தது போல பாவனைக் காட்டி, பிரஸ் க்ளப்பில் பேச வைத்து அதிர்ச்சி தகவல், அதிர்வலைகளை ஏற்படுத்தும் உண்மைகள் என தலைப்பு படம் போட்ட காணொளிகளை PEN Paid ஊடகவிலாளர்கள், யூட்யூப் முன்களப்பணியாளர்கள் வழியே செய்தியாக்கி பரபரப்பை ஏற்படுத்துவது இனியும் தொடரலாம்.

45

இந்த துயர சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு கோரியது. பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ வழக்கை கையில் எடுக்கவிருக்கையில் இவர்கள் ஏன் ஓடோடி சென்று யாராக் காப்பாற்ற முனைகிறார்கள். பெருந்துயரம் நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்களும், தமது உறவுகளை இழந்தவர்களும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், கத்தி வைத்து கிழித்தது போன்றவற்றை விமர்சித்துள்ளனர். மகளை இழந்த பிரபாகரன் என்பவரை திமுகவினர் மிரட்டி, பேரம் பேசியது குறித்து இவர்கள் வாயே திறக்கவில்லை.

இவர்களில் யாரும் திமுக அரசாங்கத்தைப் பற்றி கடுகளவு கூட விமர்சிப்பதே இல்லையே ஏன்? பயமா? இல்லை விசுவாசமா? 21 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஸ்ரீசன் பார்மா போன்ற கொள்ளை லாப வெறிக்கொண்ட மருத்துவ மாபியாக்கின் கூடாரமாக தமிழ்நாடு மாறி நிற்கிறதே... இதைப் பற்றி பேச மறுக்கும் நீங்கள் குழந்தைகள் மரணத்தை பற்றி பேசுவது உங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை எழுப்புகிறது.

திருமதி பொற்கொடி தனது கணவருக்காக, தமிழ்நாட்டின் மிக முக்கிய தலீத் தலைவரான பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு தன்னந்தனியாக போராடி வருகிறார். இந்த பெண்கள் குழு ஒருநாளாவது அவருக்கு ஆதரவாக பேசியதுண்டா? சிபிஐ விசாரணைக்கு எதிராக நிற்கும் திமுகவை கேள்வி கேட்டதுண்டா?

55

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறை, வன்கொடுமை, வல்லுறவு படுகொலைகள் தொடர்கிறது. அண்மையில், திருவண்ணாமலையில் நடத்த ஆந்திர பெண்ணின் மீதான காவல்துறையின் பாலியல் வன்கொடுமையை கண்டித்து, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது உண்டா?

நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் பொறுத்திருந்துதான் பேச வேண்டுமென பல நேரங்களில், பல்வேறு விவகாரங்களில் சட்டவாதம் பேசியவர்கள் இவர்களில் பலர். ஆனால், இன்றோ கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவின் வழிக்காட்டலில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊடகத்தில் பேசுகின்றனர்.

கருத்துரிமையைப் பறிக்க யாருக்குமே உரிமையில்லை என்று ஆணித்தரமாக நம்புபவர்கள் உள்ளனர். நீங்கள் ஒரு சாராரை மட்டுமே குற்றஞ்சாட்டும் வகையிலான கண்டறிந்த உண்மைகளைக்கூட சிபிஐ விசாரணை அலுவலத்தில் அறிக்கையாக சமர்பித்து இருக்கலாமே. அக்கறை உண்மையானதாக இருந்திருந்தால்..!’’ என சமூக ஊடகங்களில் கூறிவருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories