கட்சியின் அன்றாட நிர்வாகம், பதவி நியமனங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதுக் கொண்டார். 2025 ஜனவரி முதல், கட்சியில் மாவட்ட, இலக்கிய நிர்வாகிகள் நியமனங்களின்போது "சாதி, பணம் பார்த்து பதவி வழங்குவதாக" குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பதவிகளை சாதி அடிப்படையில் குறிப்பாக தனது சாதியினருக்கு வழங்குவதாகவும், ரூ.15 லட்சம் வரை பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. "எங்களை நாய் மாதிரி நடத்துகிறார்" என நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆரணி மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஜாதி பார்ப்பதாக பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்டார். தனக்கு இணக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, எதிர்ப்பாளர்களை புறக்கணிப்பது என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப்பிறகு புஸ்ஸி ஆனந்த் மீதான எதிர்ப்பு இன்னும் வலுவடைய தொடங்கி இருக்கிறது.