விஜய் அரசியலுக்கு வந்த ரகசியம்..! அந்த ரெண்டு நடிகைகளிடம் போட்ட சபதம்..! டாராக போட்டுடைத்த சேகுவாரா..!

Published : Oct 11, 2025, 07:45 PM IST

விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன தெரியுமா? உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினாரா? அல்லது நமக்கு ஒரு கனவு, முதலமைச்சராகி இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கினாரா?

PREV
14

விஜய்க்கு யாரோ மண்டையில் நீங்கள் தான் அடுத்த சிஎம் என்று ஏற்றி விட்டான். ஒரு விஷயத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு உண்டான தகுதியை அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கடுமையாகச் சாடியுள்ளார் அரசியல் விமர்சகர் சேகுவாரா ஜெய்சங்கர்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘‘விஜய் அரசியலுக்கு வரும் போது ஜெயலலிதா இல்லை அந்த இடத்தை நிரப்புவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து அவரது நிலைப்பாடுகளை பார்க்கும்போது அவர் நம்பிக்கையான ஒரு தலைவராகவே செயல்படவில்லை. ஒரு தலைவராக அரசியல் களத்திற்கு வந்துட்டோமா? வந்து விடவில்லையா? என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சந்தேகத்துடனே விஜயின் அரசியல் பார்க்கப்பட்டது. சமீபத்தில் நாமக்கல்லில் பேசும்போது அவர் ஒரு வார்த்தை சொன்னார் பாருங்கள். ‘‘இரண்டு வாரத்திற்கு முன்பு என்னவோ நினைத்திருந்தேன். பார்த்துவிடலாம்... சத்தியமாக பார்த்துவிடலாம்..’’ என மேடையிலே பேசியிருந்தார்.

24

ஜனநாயகன் படம்தான் தன்னுடைய கடைசி என்று அவர் உறுதியாகச் சொல்லவில்லை. உச்சத்தை விட்டுட்டு வருகிறேன் என்றுதான் சொன்னார். ஆனால் ஜனநாயகன் தான் கடைசி படம் என்று அவர் சொல்லவில்லை. அப்படியானால் அரசியலில் ஆழம் பார்க்கத்தான் வந்திருக்கிறார். வந்தால் முதலமைச்சர்..! வரவில்லை என்றால் மீண்டும் சூப்பர் ஸ்டார். இதுதான் விஜயின் திட்டமாக இருக்கிறது. இது சரியாக வராது. எம்ஜிஆர் ஒரு காலத்தில் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தார். ஜெயலலிதா கூட அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், விஜய் அப்படி ஒரு நிலைப்பாட்டில் இல்லை. விஜய் முதலமைச்சர் கனவிலே நகர்கிறார். அதுதான் பிரச்சனையே.

34

அவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்ததாக சொல்கிறார். படிப்படியாக சென்று அடுத்த நிலையை அடைய வேண்டும். விஜயகாந்த் வந்தார். அவர் வரும்போது நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் இருந்தார். அதற்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு பிறகு இரண்டாவது இடத்தை பிடித்தார். எதிர்கட்சித் தலைவரானார். விஜய்க்கு முதலமைச்சர் கனவு இருக்கலாம், அதில் தப்பில்லை. ஆனால் முழுக்க முழுக்க அவர் அந்த எண்ண ஓட்டத்திலேயே செயல்படக் கூடாது. அதற்காக நீங்கள் தயார் செய்து இருந்தீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் விஜய் அதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை.

இப்போது வரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை அவர் நடத்தவில்லை. அதுவே பெரிய பலவீனம்தான். விஜய் என்ன நினைக்கிறார் என்றால் கலைஞர் இல்லை. ஜெயலலிதா இல்லை. மு.க.ஸ்டாலினுக்கும் வயதாகிவிட்டது. அதிமுக கலகலத்து போய் இருக்கிறது. இப்போது களத்தில் யாருமே இல்லை என யாரோ மண்டையில் ஏற்றி விட்டான். நீங்கள் தான் அடுத்த சிஎம். ரஜினிகூட பயந்து ஓடிவிட்டார். அதன் வெளிப்பாடகத்தான் நான் ரிட்டையர்டாகி வரவில்லை என்று விஜய் சொல்வது. ஆகையால் யாரோ மண்டையில் நீங்கள் தான் அடுத்த சிஎம் என்று ஏற்றி விட்டான். ஒரு விஷயத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு உண்டான தகுதியை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

44

விஜய்க்கு இருக்கும் ஒரே பலம் ரசிகர்கள். அவன் ரசிகன் அவ்வளவுதான். அவன் தொண்டனாக மாறவில்லை. ஏன் இவ்வளவு அசிங்கம்? ஏன் இப்படி நடக்கப் போகிறது? இந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த ரசிகர்களை பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். நீங்கள் உங்களிடம் இருக்கக்கூடிய தொண்டர்களை வைத்து ஒரு ராணுவ படையை உருவாக்கி இருக்கலாம்.

விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன தெரியுமா? உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினாரா? அல்லது நமக்கு ஒரு கனவு, முதலமைச்சராகி இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கினாரா? என்று கேட்டால் இல்லவே இல்லை. இரண்டு நடிகைகளிடம் சவால் விட்டுள்ளார். சத்தியம் செய்து சொல்கிறேன். இரண்டு நடிகைகளும் சவால் விட்டுத்தான் அவர் அரசியலுக்கே வந்தார்.

இரண்டு நடிகைகள் விஜயிடம், ‘‘உங்களிடம் என்ன இருக்கிறது? உங்களிடம் என்ன இல்லை’’ என்று விவாதிக்கிறார்கள். உங்களிடம் உங்களிடம் பணம் இருக்கிறது புகழ் இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது, புகழும் இருக்கிறது, அதிகாரமே இருக்கிறது’’ என்று அந்த நடிகைகள் கூறி இருக்கிறார்கள். ‘‘அந்த அதிகாரத்தை நான் பிடித்துக் காட்டுகிறேன்’’ என்று அரசியலுக்கு வந்தவர்தான் விஜய். என் நெஞ்சை இரண்டாகப் பிளந்து காட்டுகிறேன். இதுதான் உண்மை’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories