தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனரும், தலைவருமான கி,வீரலட்சுமி சமீபகலாமக தவெகவை பற்றியும் அக்கட்சியின் தலவர் விஜய் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்துள்ளார். வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை தலைவராக, இச்சம்பவத்தின் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். விஜய் மீது யாரும் அவதூறு பரப்பவில்லை. நடந்ததைதான் விமர்சிக்கிறார்கள் எனக் கூறினார்.
"ஒரு பெண்ணான நானே போராடிய நிலையில் விஜய் ஏன் அங்கிருந்து ஓடி ஒளிந்தார்? கரூர் சம்பவம் அவரால்தான் நடந்தது. விஜய் ஓடி ஒளிவதாக விமர்சித்தார். விஜய் ரசிகர்களை குறிப்பாக பெண்களை கடுமையாக எச்சரித்து, "விஜய் ரசிகர்களுக்கு பொண்ணு கொடுக்காதீங்க காதலிக்காதீங்க" என்று அறிவுரை வழங்கினார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.