கரூர் துயர வழக்கு சிபிஐ வசம் இருக்கக் கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளார் விஜய். இப்போது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
தவெக தலைவர் விஜயின் முதற்கட்ட சுற்றுப்பயணம் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கி அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் நடைபெற்று வநந்தது. கரூர் துயர வழக்கு சிபிஐ வசம் இருக்கக் கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளார் விஜய். இப்போது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் இருந்து மீண்டும் மக்கள் சந்திப்பு பணத்தை தொடங்க இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் தாளமுத்து நடராசர் இல்லம் அருகில் போஸ் மைதானம், பழைய பேருந்து நிலையம் அருகில் கோட்டை மைதானம் உள்ளிட்ட நான்கு இடங்களை தேர்வு செய்து அதில் ஒரு இடத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
24
தவெகவுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
நான்காம் தேதி மதியம் 12 மணி முதல் நான்கு மணி வரை மக்கள் சந்திப்புக்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் நான்காம் தேதி சனிக்கிழமை கிடையாது .வியாழக்கிழமை. அதாவது சனிக்கிழமைகளில் மட்டுமே பயணம் என்கிற முடிவை மாற்றி வாரத்தில் இரண்டு நாட்கள், இரண்டு மாவட்டங்களில் விஜயின் சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபம், ஐந்தாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள், ஆறாம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம், அம்பேத்கர் நினைவு நாள் என அடுத்தடுத்த நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் வருவதால் அந்த தேதியை மாற்ற சொல்லி காவல்துறை தரப்பில் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பேருந்து மூலமாக பிரச்சாரம் இருக்காது, பொதுக்கூட்டங்கள் போன்று நடத்தப்படும் எனக்கூறப்பட்ட நிலையில் விஜய் மீண்டும் பேருந்து பிரச்சாரத்தையே மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு நாளைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவிருக்கும் நிலையில் முழு வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு விஜயின் முழு பயணத்திட்டம் வெளியாகும் என்கிறார்கள். குறிப்பாக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி அதற்கு ஏற்றாற்போல இனி விஜயின் பிரச்சார கூட்டங்கள் இருக்கும் என்கிறார்கள்.
34
களத்தில் 2500 பேர்
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தங்களது தொண்டரணியை மிகவும் வலுவாக கட்டமைத்டுத்து இருக்கிறது. தொகுதி வாரியாக தொண்டரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 2500 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் பயிற்சி வழங்கி இருக்கிறார்கள். அதன்படி இனிவரும் நாட்களில் தவெகவின் பிரச்சார கூட்டங்களில் இந்த தொண்டரணி நிர்வாகிகள் பொதுமக்கள், விஜயின் பாதுகாப்பை கவனித்து கொள்ள உள்ளனர்.
இதற்கு முன்பு வெளியான விஜயின் பயணத் திட்டத்தின்படி கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்து பொங்கல் விடுமுறை வரையிலான பயணம் திட்டத்தில் ஒரு இடைவெளி இருந்தது. ஆனால் புதிதாக உருவாக்குற பயணத் திட்டத்தில் இடைவெளி இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கரூர் சம்பவத்தால் விஜயின் சுற்றுப்பயணம் இரண்டு மாதங்களாக தடைப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத கால இடைவெளி உள்ளதால் தொடர் சுற்றுப்பயணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.