
பீகார் மாநிலத்தைப்போலவே என்.டி.ஏ கூட்டணியும் வாக்கு பிரிப்பு ஃபார்முலாவையும் தமிழக தேர்தலில் புகுத்த திட்டமிட்டு இருக்கிறது பாஜக தலைமை. அசாதுதீன் ஓவைசி கட்சியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மூலம் பீகாரில் சிறுபான்மையினர் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்தது. ஓவைசியின் கட்சி 6 இடங்களில் வெற்றிபெற்றது. இன்னொரு பக்கம் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என மூன்று கட்சிகளும் பெரிய அளவில் வாக்குகளை பிரித்தார்கள். பீகாரில் 20 சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களுடைய வாக்குகளை அவர்கள் பிரித்துக் கொண்டனர். இந்த வாக்குகள் ஓவைசியின் கட்சி அதிக அளவில் பிரித்துக் கொண்டது. இந்த வாக்குகள் கிட்டத்தட்ட ஒன்பது தொகுதிகளில் மெகா கூட்டணி தோல்விய சந்தித்தது.
பிராசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை. படுதோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 98% தொகுதிகளில் டெபாசிட்ட இழந்து விட்டது. 3.4% வாக்குகளை மட்டும் தான் பெற்றது. ஒரு தொகுதியில் இரண்டாவது இடமும், 129 தொகுதிகளில் மூன்றாவது இடமும், 73 தொகுதிகளில் நாலாவது இடமும் பிடித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 33 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் குறைவாகவே இருந்தது. அந்த 33 தொகுதிகளிலும் ஜன்சுரான் கட்சி அதிக அளவில் வாக்குகளை பெற்றிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஒருவகையில் மறைமுக காரணமாக ஜன்சுரான் பிரித்த வாக்குகளே முக்கியக் காரணம். அடுத்து உத்தரப் பிரதேசத்துடைய முன்னாள் முதலமைச்சரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை எடுத்துக் கொண்டால் 181 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஒரு தொகுதியில் மட்டும் இரண்டாவது இடத்தை பிடித்தது. அவர்கள் போட்டியிட்ட 20 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் ரொம்பவே குறைவு. இந்த 20 தொகுதிகளிலும் பகுஜன் சமாக் கட்சி பெற்ற வாக்குகள் அந்த வெற்றி வித்யாச வாக்குகளை விட அதிகம். இவங்களுடைய வாக்குகளும் மெகா கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த 20 தொகுதிகளில் 18 தொகுதிகளில், என்.டி.ஏ கூட்டணி வெற்றிக்கு மறைமுக காரணமாக இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்பீகாரில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான பட்டியல் சமூக மக்களுடைய தலித் மக்களுடைய வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி பெரிய அளவில் அறுவடை செய்தது.
இளம் வாக்காளர்கள், நகர்புற வாக்காளர்கள், பொதுவான வாக்குகள் இப்படி அனைத்தையும் இந்த மூன்று கட்சிகளும் பெரியளவில் பிரித்து விட்டார்கள். இந்த மூன்றுமே பெரிய அளவில் அடித்தளமாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் ஆர்ஜேடி கட்சிக்கும் கிடைக்க வேண்டிய வாக்குகள். இந்த வாக்குகளை பிரித்துக் கொண்டு போனதால் பெரிய சேதாரத்தை சந்தித்து ஒரு மோசமான தோல்வியை தழுவியது மெகா கூட்டணி. இவர்கள் பிரித்த வாக்குகள் இன்னொரு பக்கம் என். டி.ஏவின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் பீகார் ரிசல்ட் சொல்கிற செய்தி. இதைத்தான் அப்படியே இங்கே தமிழ்நாட்டிலும் கொண்டு வர நினைக்கிறது பாஜக.
விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என்.டி.ஏ கூட்டணியின் இணைய வேண்டும் என தொடக்கத்தில் இருந்தே விருப்பத்தை சொல்லி வருகிறார்கள். ஆனால் அவரோ வாய்ப்பில்லை எனச் சொல்லி வருகிறார். பாஜக கூட்டணி கிடையாது என அவர் சொல்லி வந்தாலும்ன் அவர் பிரிக்கிற அந்த வாக்குகள் தங்களுக்கு சாதகமாக அமையும். அவருக்கும் சிறுபான்மையினர்களிடன் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்களிடம் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு நிறைய நலத்திட்டங்களை திமுக கொண்டு வந்து இருக்கிறது. ஒரு காலத்தில் பெண்களுடைய வாக்கு வங்கியை அடித்தளமாக கொண்டு வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தது அதிமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் அந்த வலுவான பெண்கள் வாக்கு வங்கி திமுக பக்கம் திரும்பி விட்டது.
தற்போதைய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பெண்களுக்கான நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக மகளிருக்கான உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் என பல விஷயங்களை கொண்டு வந்ததன் மூலம் திமுக பக்கம் கணிசமாக பெண்களின் வாக்குகள் வந்து சேரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அந்த வாக்கு வங்கியில் பெரிய சேதாரத்தை விஜய் ஏற்படுத்துவார். னென்றால் விஜயின் இரண்டு மாநாடுகள், அவரது தொடர் போராட்டங்கள் என எல்லா இடங்களிலுமே அதிக அளவில் பெண்களும் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. ஆகையால், விஜய் பெண்கள் வாக்குகளையும் பெரிய அளவில் சேதாரத்தை ஏற்படுத்துவார்.
இளம் வாக்குகள், சிறுபான்மையினருடைய வாக்குகள், பெண்கள் வாக்குகள் பெரியளவில் விஜய் பிரித்தால் அதை நம்பி இருக்கிற திமுக கூட்டணி சேதாரத்தை சந்திக்கும். இதன் மூலமாக வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறது பாஜக. அதனால்தான் விஜயை பெரிதாக அவர்கள் அட்டாக் செய்வதில்லை. அதே நேரத்தில் விஜயோ, எல்லா விஷயத்திலும் திமுக ஏமாற்றுகிறது என திமுகவை அட்டாக் செய்து பேசி வருகிறார். அது எல்லாமே தங்களுக்கு சாதகமாக அமையும் எனக் கணக்கு போட்டு வருகிறது பாஜக.
பீகாரில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்றெல்லாம் பார்க்காமல் கூட்டணியில் சேர்த்தது பாஜக. உதாரணமாக சிராக் பஸ்வான். ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் நிறைய தொகுதிகளை ஒதுக்கினார்கள். கிட்டத்தட்ட 19 எம் எல் ஏக்கள் இந்த முறை வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த வெற்றி ஆர்ஜேடி, காங்கிரஸ்க்கு பேரிடியாக மாறியது. கடந்த 2020ல் அந்த கட்சி இந்தியா கூட்டணியில் இருந்தது. இந்த முறை கூட்டனி மாறியதால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தொகுதிகளில் கணிசமான இடங்களில் சிராக் பஸ்வானின் கட்சியால் வெற்றி பெற முடிந்தது.
அதே போல்தான் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகளையும், சின்ன கட்சிகள், பெரிய கட்சிகள் என வேறுபாடு காட்டாமல் பல கட்சிகளையும் கூட்டணிக்கு உள்ளே கொண்டு வர நினைக்கிறது பாஜக. இதற்காக சில வேலைகளிலும் முன்பே இறங்கி விட்டது. இப்போது அதை தீவிரப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாகச் சொன்னால், தேமுதிக இந்த கூட்டணியில் இருக்க வேண்டுமென உறுதியாக இருக்கிறார்கள். ஜி.கே.வாசன் என இன்னும் நிறைய கட்சிகளை எல்லாம் கூட்டணிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். இவை எல்லாமே ஒரு சதவிகிதம், இரண்டு, மூன்று சதவிகிதம் வாக்குகளைக்கூட சிதறி போகாமல் அப்படியே என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வரும் என்பது அவர்களது எண்ணம்.
இவர்கள் யாரும் திமுக கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாகவும் இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களுக்கு எதிரான கருத்துக்களை பேசாமல் தொடர்ந்து அரவணைப்போல நடந்து கொள்கிறது பாஜக. இந்த சிறிய கட்சிகள் தங்களை தாக்கிப்பேசினால்கூட பெரிய எதிர்வினைகளை காட்டாமல் தங்களுடைய நகர்வுகளை ஸ்மூத்தாக முன்னெடுத்து வருகிறது பாஜக.
முன்னாள் முதலமைச்சர்லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் இருந்து அவருடைய மகள்கள் ரோகினி உள்ளிட்ட மூன்று மகள்களுமே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அந்த குடும்பத்துக்குள் புயல் வீசிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக தேஜாஸ்ரீ யாதவ். ஏற்கனவே அவருடைய சகோதரர் தனியாக சென்று கட்சின் ஆரம்பித்தார். இப்படி இந்த குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த அரசியல் அதிகாரத்தை மையப்படுத்திதான் பாஜக அங்கே தீவிரமாக பரப்புரை செய்தது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் பீகார் பாதிக்கப்படுகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வன்முறை அதிகமாகும். குடும்ப ஆதிக்கம் இன்னும் அதிகமாகும் என பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதிஷ்குமார் என பலரும் பிரச்சாரம் செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அரசியல் திமுகவின் வாரிசு அரசியலையும் இங்கே டார்கெட் செய்ய உள்ளனர். பீகாரில் என்.டி.ஏ வெற்றி அடைந்ததற்கு முக்கியமான காரணம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் திடீரென நிதீஷ்குமார், மகளிர் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேலான பெண்களுடைய வங்கிகணக்கில் ரூ. 10 ஆயிரத்தை செலுத்தினார். இது அந்த நேரத்துல பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் முன்கூட்டியே அப்படி செய்தது வெற்றிய கொடுத்தது.
அதேபோல் இங்கே தேர்தல் நெருங்கிற நேரத்தில் புதிதாக வசீகரமான சில விஷயங்களை முன்னெடுப்போம் என பாஜக பக்கத்தில் இருந்து அதிமுகவிடம் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே பரப்புரை நேரத்தில் மகளிருக்கான உரிமை தொகையை நாங்கள் அதிகப்படுத்தி வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார் எடப்பாடி. இப்படியாக பல வகைகளில் பீகார் வெற்றியை வைத்து அந்த பார்முலாவை கையில் எடுத்து வந்து தமிழகத்தில் அமல்படுத்த தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது பாஜக.