அக்டோபர் 22, 1989 அன்று பிறந்த தீபக் பிரகாஷ், கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
எம்.ஐ.டி. மணிபாலில் பட்டம் பெற்றார். 2011-ல் கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 2005-ல் ஐ.சி.எஸ்.இ வாரியத்தில் 10 ஆம் வகுப்பையும், 2007-ல் சி.பி.எஸ்.இ வாரியத்தில் 12 ஆம் வகுப்பையும் முடித்தார். எம்.ஐ.டி. மணிபாலில் பி.இ. பட்டம் பெற்ற பிறகு, 2013 வரை மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றினார். தீபக் பிரகாஷ் 2019-ல் அரசியலில் நுழைந்தார்.
எளிமையாக, மென்மையாக பேசும் வழக்கம் கொண்ட தீபக் பிரகாஷ் காதல் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் ஸ்மிருதி மிஸ்ரா. பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது தீபக் பிரகாஷுடன் ஸ்மிருதி மிஸ்ராவும் பிரச்சாரம் செய்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் சசாரம் தொகுதியில் போட்டியிட்ட சினேகலதா, 25,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற்றார். அவருக்கு 105,006 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளர் சத்யேந்திர சஹா 79,563 வாக்குகள் பெற்றார்.