தவெகவுக்கு தாவும் உடன்பிறப்புகள்..! பிறந்த நாளில் ஏமாந்த உதயநிதி..! கடுப்பான மு.க.ஸ்டாலின்..!

Published : Nov 27, 2025, 05:31 PM IST

கட்சிக்காரர்களை அரவணைத்து போகத் தெரியாதா? அவங்களையே அனுசரிச்சு போகாத நீங்க, பொதுமக்கள்கிட்ட எப்படி நடந்துப்பீங்க? திமுக அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்தோம். உங்க செயல்பாடு இப்படி இருந்தால் என்ன பலன்?

PREV
14
தவெகவுக்கு தாவும் 6 EX அமைச்சர்கள்

நிர்வாகிகளை அரவணைத்துப் போகாத திமுக மாவட்ட செயலாளரால் திமுக தொண்டர்கள் தவெகவுக்கு சென்றதால் மாவட்டச்செயலாளரை நேரில் அழைத்து கடுமையாக கண்டித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செங்கோட்டையனைத் தொடர்ந்து மேலும் சில தலைவர்கள் தவெகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. 6 முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு செல்ல இருக்கிறார்கள் என்கிற தகவல் புயலை ஏற்படுத்தியுள்ளது.

24
செங்கோட்டையனால் ஏமாற்றம்

செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்து வர முடியவில்லை என்கிற ஏமாற்றம் உதயநிதியை பாடாய்ப்படுத்துவதாக அறிவாலய வட்டாரத்தினர் கூறுகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் -திமுக அமைச்சர் சேகர் பாபு இருவரும் சந்தித்து பேசினர். செங்கோட்டையனை திமுகவில் இணைக்கவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. ஆனால், செங்கோட்டையன் பிடிகொடுக்கவில்லை. அவரை எப்படியும் திமுகவில் இணைத்து விட வேண்டும் என்கிற முடிவில் இருந்தனர் திமுக சீனியர்கள். அடுத்து, செங்கோட்டையனின் லைனுக்கு இரண்டு முறை சென்றார் மு.க.ஸ்டாலின். அப்போது, உங்களுக்கு என்ன தேவை. உங்களை போன்ற அனுபவமுள்ள சீனியர்கள் திமுகவுக்கு வந்தால் நல்லது. நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் நாங்கள் செய்து தருகிறோம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதற்கு முன் சில திமுக சீனியர் தலைவர்கள் முதல் நாள் இரவு முதல் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.

34
கடுப்பில் ஸ்டாலின்

ஆனால், செங்கோட்டையனோ, "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என மறுப்பு தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார். திமுகவினர் பலர் பேசினாலும் செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். இதற்கு காரணம், செங்கோட்டையன் "திமுகவின் பி-டீம்" என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி வந்தார். அந்த வதந்தி தன்னால் உண்மையாகி விடக்கூடாது என்பதால் செங்கோட்டையன் திமுகவை தவிர்த்தார். இதனையடுத்து செங்கோட்டையனும் தவெகவில் இணைந்து விட்டார். இது திமுகவுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நாள் உதயநிதியின் பிறந்த நாள்.

செங்கோட்டையனை திமுகவுக்கு கொண்டு வருவதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பிறந்த நாள் பரிசு என சில அமைச்சர்களிடம் வற்புறுத்தி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அது நடக்காததால் உதயநிதியும் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக இந்த டென்ஷனில் இருக்க திமுகவினர் தவெகவுக்கு தாவி வருவதை அறிந்து கடும் கோபத்தில் இருக்கிறார் ஸ்டாலின்.

44
அறிவாலயத்துக்கு பறந்த புகார்

‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் கடுமையாக எச்சரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். காரணம் தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் கட்சி பதவிகளை கொடுப்பதைத வழக்கமாக வைத்திருக்கிறார் காதர் பாட்ஷா. இதனால் பல நிர்வாகிகள் தவெகவுக்கு மாறி வருகிறார்கள். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட்டில இருந்த கடைகளையும் வழக்கம்போல தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு ஒதுக்க, இதுவும் கட்சி தலைமைக்கு புகாரப் போய் இருக்கிறது. இந்தப்புகாரால் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதர் பாட்ஷாவை கடுமையாக கண்டித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ‘‘கட்சிக்காரர்களை அரவணைத்து போகத் தெரியாதா? அவங்களையே அனுசரிச்சு போகாத நீங்க, பொதுமக்கள்கிட்ட எப்படி நடந்துப்பீங்க? திமுக அரசாங்கம் எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்தோம். உங்க செயல்பாடு இப்படி இருந்தால் என்ன பலன்? என்று கடுமையாக பேசி எச்சரித்து அனுப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories