அரசியலில் யாரும் எதிர்பார்காத டிவிஸ்டாக தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு நிர்வாக குழு ஒருங்கினைப்பாளர் பதவி , ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் மூத்த தலைவரும், 50 ஆண்டு கால அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று கூடி, டிடி.வி. தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.