ஆனால், செங்கோட்டையனோ, "இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள்" என மறுப்பு தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார். திமுகவினர் பலர் பேசினாலும் செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முடிவெடித்துவிட்டார். இதற்கு காரணம், செங்கோட்டையன் "திமுகவின் பி-டீம்" என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி வந்தார். அந்த வதந்தி தன்னால் உண்மையாகி விடக்கூடாது என்பதால் செங்கோட்டையன் திமுகவை தவிர்க்கிறார் என்கிறார்கள். இந்நிலையில் நாளை தவெகவில் செங்கோட்டையன் இணைவது உறுதி எனக்கூறப்படுகிறது.
எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த பிறகு சென்னை, மவுண்ட் ரோடு பகுதியை செங்கோட்டையினுடைய கார் வட்டம் அடித்தது. இந்நிலையில் அவர் விஜய சந்திப்பாரா? அல்லது அதற்கு முன்னதாக அறிவாலயம் செல்வாரா என்கிற குழப்பம் ஏற்பட்டது. அவரது அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. இந்நிலையில், விஜயின் பனையூர் இல்லத்தில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.